search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traders Association"

    • உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விற்பனை வரி ஆலோசனைக்குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.

    மதுரை

    தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மதுரையில் இன்று சமா தான் திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கலெக்டர் சங்கீதா, வணிக வரித்துறை ஆணை யாளர் ஜெகன் நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேல் சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம், ஆலோசகர் ஜெயபிரகாசம், துணை தலைவர் ஜெயகர், செயற்குழு உறுப்பினர் திருமுருகன் ஆகியோர் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    சமாதான் திட்டத்தில் சேர்வதற்கான கால வரம்பான 31.3.2021 என்பதை மாற்றி 31.10.2023 வரை நிலுவையில் உள்ள ஆணைகளுக்கும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் அதிக வணிகர்கள் பயனடை வார்கள். அதிக மேல்முறையீடு வழக்குகள் தீர்வு காணப்படும்.

    மதுரை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட விற்பனை வரி ஆலோசனைக்குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். அதில் எங்கள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் அப்பளத்திற்கு வரி இல்லை என்ற தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

    25 கிலோவிற்கு மேல் பேக் செய்து விற்கப்படும் வெல்லத்திற்கு வரி உண்டா? என்பதை விளக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார்.
    • பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகர அனைத்து வியாபாரி கள் சங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட் சிட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் பொன்னேரியில் வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவம், கண், மூக்கு, காது, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார். முகாமில் பொது செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் பிரகாஷ் சர்மா, மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயண பாபு, மருத்துவ கண்காணிப்பாளர் முனியப்பன் , பொன்னேரி காவல் ஆய்வாளர் வடிவேலு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை சிந்தாமணி கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி கடம் பவனம் அப்பளம் வியாபாரி–கள் சங்க 3-ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட் டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெற்றது. விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார். செயல் தலைவர் வி.சி.சீனிவாசன் வரவேற் றார். செயலாளர் எம்.கண்ணன் செயல் விளக்கம் அளித்தார். பொருளாளர் எஸ்.ராமமூர்த்தி நிதி நிலை அறிக்கையினை சமர்ப்பித் தார்.

    விழாவில் உணவுப்பாது–காப்புத்துறை மதுரை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வி.ஜெயராம–பாண் டியன், மதுரை மாவட்ட தொழில்மைய இணை இயக்குனர் எஸ்.கணேசன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மண்டல தலைவர் டி.கே.அபிஜித், ஐ.டி.டி.சி. தொழில் வணிக மேம்பாட்டு மைய சேர்மன் எஸ்.வி.சூரஜ்சுந்தர சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை–யாற்றினர்.

    மேலும் இந்த விழாவில், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், மதுரை நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் கே.மோகன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலை–வர் எஸ்.வி.எஸ்.எஸ்.வேல் சங்கர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல தலைவர் டி.செல்லமுத்து, மடீட்சியா தலைவர் எம்.எஸ்.சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் துணைத்தலைவர் எம்.பாலமுருகன், இணைச் செயலாளர்கள் ஆறுமுகம், பிரதாப் சந்திரன், அர்ஜூன் பாலா, செயற்குழு உறுப்பி–னர்கள் பாலசண்முகநாதன், கருப்பையா, லோகேஸ்வ–ரன், ராஜா, ராஜபாண்டி, பன்னீர்செல்வம், பழனிக் குமார், முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர் பாக பல்வேறு முக்கிய தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    முடிவில் துணைத்தலை–வர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார்.

    • திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடந்தது.
    • இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணி களை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் நெல்லை- திசையன்விளை இடையே 'என்ட் டு என்ட்' என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    நெல்லையில் இருந்து திசையன்விளைக்கு தினமும் காலை முதல் இரவு வரை தலா 10 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த இடைநில்லா பஸ்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரத்தில் கடக்கும் இந்த பஸ்களில் ஏராளமான மாணவ-மாணவிகள், அலுவலர்கள், வியாபாரிகள் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்த பஸ்களில் எபோதும் கூட்டம் அலை மோதும். இந்தநிலையில் இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலை யத்திற்குள் சென்று பயணி களை ஏற்றி இறக்கி செல்கின்ற னர்.

    இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடு கிறது. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபடு கிறா ர்கள். எனவே முன்பு போல நெல்லை-திசையன்விளை 'என்ட் டு என்ட்' பஸ்களை இடைநில்லாமல் இயக்க கோரி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது
    • பொருளாளர் ராஜாராம் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஆதிசேஷன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் ராஜாராம் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் பூபால் ராஜன், சண்முக வெங்க டேசன், பாஸ்கரன், பாலமுருகன், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆறுமுகநேரி பகுதியில் அடிக்கடி நடக்கும் மின் தடையை தவிர்க்க வேண்டும்.மேலும் பல இடங்களில் மின் கம்பிகளில் தொய்வு ஏற்பட்டு தாழ்வாக கிடப்ப தால் அதனால் விபத்து ஏதும் நடந்து விடாமல் இருக்க அதனை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என்றும் மின் சாரத்துறை அதிகாரி களை வலியு றுத்தி தீ ர்மா னங்கள் நிறைவேற் றப்பட்டன.

    • இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • கடைகளின் முன்பகுதியில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சுற்று வட்டாரத்தில் தொடர்ச்சி யாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வள்ளியூர் பகுதி வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பகுதிகளிலும் கடையின் உள்பகுதிகளிலும் உயர் திறன் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வள்ளியூர் பேரூராட்சியில் உள்ள ராஜரத்தினம் நகர், இ.பி.காலணி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தவிர பகல் நேரத்தில் இருசக்கரவாகன திருட்டுகள் அதிகரித்து வருகிறது. எனவே வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பகுதியில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை சேமித்து வைக்கும் கருவிகளில் சேமிக்கவும் அதனை உறுதி படுத்திக் கொள்ளவும் செய்ய வேண்டும். கண்காணிப்பு காமிராவின் செயல்பாடுகளை தங்களது அலைபேசியில் கண் காணித்துக் கொள்ளுங்கள்.

    மேலும் வள்ளியூர் பேரூராட்சி தற்போது தொழில்நிறுவனங்களாலும், ஜனநெருக்கடியிலும் அதிகரித்து வந்துள்ளது.

    வெளியூர்களில் இருந்து அதிக மக்கள் வள்ளியூரில் குடியேறியுள்ளனர்.

    குறிப்பாக வடமாநி லங்களைச் சேர்ந்த ஆயிரத்தி ற்கும் அதிகமானோர் புதிதாக குடியேறியுள்ளனர். இப்படி வளர்ச்சியடைந்துள்ள வள்ளியூர் காவல்நிலை யத்தில் காவலர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    குறைவான காவலர்க ளால் வளர்ச்சியடைந்து வரும் வள்ளியூர் பகுதியை கண்காணிக்க சிரமமாக உள்ளது. எனவே வள்ளியூர் காவல்நிலையத்தில் கூடுதலாக காவலர்களை நியமிக்கவேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    • 12-ந் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா வருகை.
    • வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோட்டை விநாயகர் கோயில் திடலில் சங்க செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நந்தகுமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் லாலா கணேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பொன்னுசாமி,ஆறுமுகபெருமாள், ரங்கசாமி,அய்யாசாமி, தங்கராஜ்,ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 12-ந் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா பல்லடத்திற்கு வருகை தந்து சங்க பெயர் பலகை மற்றும் சங்க கொடியை ஏற்றி வைத்து வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது.

    பல்லடம் நகராட்சி கடைகள் ஏலம் விடும் போது வியாபாரிகளுக்கு தெரிவித்து ஏலம் விட வேண்டும். பல்லடத்தில் பல வணிக கடைகள் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் உள்ளது. இது தமிழக அரசின் ஆணைக்கு எதிரானது ஆகும். அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் .தேவைப்படும் போது ஆங்கிலத்திலும் சேர்ந்து பெயர் பலகை வைத்துக் கொள்ளலாம். இது குறித்து தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • சின்னியம்பா–ளையம் கிளை நிர்வாகிகள் கூட்டம் சின்னியம்பாளையம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • தந்திர தின விழாவை சங்கத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கோவை

    கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சின்னியம்பா–ளையம் கிளை நிர்வாகிகள் கூட்டம் சின்னியம்பாளையம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சின்னியம்பாளையம் கிளை தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்து அனைவரையும் வரவேற்றார்.


    கூட்டத்தில் தலைமை கமிட்டியின் சார்பில் தலைமை தலைவர் முத்துப்பாண்டி, செய்தி தொடர்பாளர் தனிஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, முகக் கவசம் அணிவது, புகையிலை பொருட்களை தடை செய்வது போன்ற விழிப்புணர்வு நோட்டீஸ்களை அனைத்து கடைகளிலும் ஒட்ட செய்வது, சுதந்திர தின விழாவை சங்கத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அலுவலகப் பொறுப்பாளர் ஜெபராஜ், துணை தலைவர்கள் முருகன், கணேசன், ராஜா, துணை செயலாளர்கள் ஜஸ்பர், ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×