என் மலர்
நீங்கள் தேடியது "Trailer"
- அய்யப்ப சுவாமி பற்றிய திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாநடைப்பெற்றது.
- பாஜக. தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு இசை, ட்ரெய்லரை வெளியிட்டார்.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் திருப்பூரை சேர்ந்த சஞ்சய் மணிகண்டன் என்பவர்இயக்கத்தில்,இசையமைப்பாளர் குட்லக் ரவி இசையில் தயாரிக்கப்பட்டுள்ள "ஸ்ரீராஜ மணிகண்டன்" என்ற அய்யப்ப சுவாமி பற்றிய திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாநடைப்பெற்றது.
இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக. தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு இசை, ட்ரெய்லரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. ஆன்மீக மேம்பாட்டு தலைவர், எம்.எஸ்.நகர் மண்டல தலைவர் வேலுச்சாமி ,செயலாளர் பழனியப்பன், குமார பாலா பவுண்டேஷன் சேர்மன் சதீஷ்குமார்,பூண்டி நகர தலைவர் ஜெயப்பிரகாஷ்மற்றும் திரைப்பட நடிகர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார்.
- ரணம் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர் வைபவ்வின் 25வது படமான ரணம், ஷெரிப் இயக்கத்தில் உருவாகி உள்ளது.
இந்த படத்தில், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார். அரோள் கரோலி இசையமைத்துள்ளார். ரணம் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், ரணம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. டிரெயிலரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "வைபவின் 25வது படமான #ரணம்அரம்தாவரேல் வெற்றி பெற என் அன்பு சகோதரனுக்கு வாழ்த்துகள். நீங்கள் இன்னும் பல மைல்கற்களை விரைவில் எட்டுவீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
- படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது.
- சைத்தான் வரும் மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்'. இது ஒரு திரில்லர் படம் ஆகும். இந்த படத்தில் ஆர்.மாதவன் 'சைத்தான்' வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் காட்சி வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடந்தது. இதில் நடிகர்கள் அஜய்தேவ்கன், மாதவன், நடிகை ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்த அஜய்தேவ்கன் கருப்பு நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார். மாதவன் பழுப்பு நிற ஓவர்கோட் அணிந்திருந்தார். ஜோதிகா வழக்கம் போல் பேன்ட்சூட் அணிந்து இருந்தார்.
படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது. பிரமிக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்து இருந்தது.
'ரோலர்கோஸ்டர்' சவாரிக்கு அழைத்துச்செல்வது போலவும் இருந்தது. முன்னெப்போதும் இல்லாத ஒரு த்ரில்லான அனுபவத்தை டிரெய்லர் அளித்தது. இப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
- பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.
- ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியானது.
இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "ஜோஷ்வா- இமை போல் காக்க" பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.
இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் மார்ச் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கடந்த வாரம், ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியானது.
இந்நிலையில், ஜோஷ்வா- இமை போல் காக்க திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று ரிலீஸ் ஆனது.
- இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார்.
- பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நான் படத்திற்கு பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களில் நடித்தார். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மக்களிடையே கொண்டாடபட்டது.
விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் பிச்சைக்காரன். அதற்கடுத்து கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்தார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார்
- மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. 'நுவ்விலா' படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு சினிமா துறையில் விஜய் தேவரகொண்டா அறிமுகமானாலும். 2016 ஆம் ஆண்டு வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் இவரை மக்கள் அங்கீகரிக்க ஆரம்பித்தார்கள்.
இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு விஜயதேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அர்ஜூன் ரெட்டி புகழ் உலகமெங்கும் பரவியது. விஜய் தேவரகொண்டாவை ஒரு ரக்கட் பாய்-க்கு முன்னுதாரணமாக வைத்து இருந்தனர். அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.
பின் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் , கெமிஸ்டிரியும் மிக அழகாக அமைந்து இருக்கும். பின் 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படம் மக்களிடையெ எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.
இந்நிலையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார். மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கீதா கோவிந்தத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன், பரசுராம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி எப்படி வெற்றி அடைந்ததோ அதே போல் மிருணாள் தாகுர் ஜோடியும் வெற்றி பெறும் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அரண்மனை - 4 திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை.
- 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன்
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் நடித்தனர்.
இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'அரண்மனை-2' படத்தில் 2016-ல் திரிஷா, ஹன்சிகா நடித்தனர். அந்த படமும் வெற்றி பெற்றது. மேலும் 2021-ல் அரண்மனை - 3- படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் நடித்தனர்.
இப்படமும் வெற்றி பெற்றதை யொட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் அரண்மனை- 4 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர். சி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார்.

இப்படத்தில் நடிகை தமன்னா மீண்டும் பேய் வேடத்தில் நடித்து உள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில் சுந்தர்.சி, தமன்னா, யோகிபாபு, ஹிப்ஹாப் ஆதி, ராஷி கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் தமன்னா பேசியபோது "அரண்மனை - 4 திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன். இசையின் வேகம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு சிறப்பான திகில் படமாக அமைந்து உள்ளது." என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உத்தர பிரதேசத்தின் மீரட்டில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார்.
- அப்போது பேசிய அவர், மூன்றாவது முறை ஆட்சி அமைக்க பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது என்றார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல்.
உலகளவில் 11-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தபோது, நாட்டில் வறுமை அதிகரித்தது. 5-வது இடத்திற்கு வந்த போது, 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறினர்.
3-வது இடத்திற்கு வரும்போது வறுமை முற்றிலும் அகற்றப்படுவதுடன், அதிகாரம் பெற்ற மத்திய தர வர்க்கத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பார்கள்.
கடைசி 10 ஆண்டுகளில் வளர்ச்சிக்கான டிரைலரை மட்டும் பார்த்துள்ளீர்கள். நாட்டை இன்னும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை மக்கள் முன்பு உள்ளது. மூன்றாவது முறை ஆட்சி அமைக்க பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது.
அடுத்த 5 ஆண்டுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி உள்ளோம். அடுத்த ஆட்சியில் முதல் 100 நாட்களில் மிகப்பெரிய கொள்கைகளுக்காக பணியாற்றுகிறோம்.
ஊழல்வாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன தடை வந்தாலும் அதை நிறுத்த மாட்டேன். ஊழல்வாதிகள் ஒன்றுசேர்ந்து இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அக்கூட்டணியை கண்டு பயப்பட மாட்டேன் என தெரிவித்தார்.
- பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்
- போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்; கடந்த 10 ஆண்டுகளில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட விஷயங்களை சாத்தியமாக்கி இருக்கிறோம். ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில்,
"10 ஆண்டு ஆட்சி ட்ரெயிலர் என்கிறார். போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?
வெற்று கதைகளை பேசுவதற்கு பதிலாக கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டேன் என்று சொல்வாரா மோடி?
20 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினேன் என்று சொல்வாரா மோடி?
நாட்டிலேயே அமித்ஷாவின் உள் துறை தான் ஊழல் மிக்க துறை, இதை வைத்துக்கொண்டு ஊழலை ஒழித்து விட்டேன் என்று சொல்வாரா மோடி?
இந்திய மக்கள் ட்ரெயிலரையும், ப்ரிவ்யூ ஷோவையும் எதிர்பார்க்கவில்லை. வளர்ச்சிக்கான ஆட்சியை தான் எதிர்பார்த்தனர். ஆனால் அதை உங்களால் தரமுடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து தளங்களிலும் இந்தியா தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. ஊழல் தலைவிரித்தாடும் இந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
- 2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா .
- பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.
2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா . ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.
மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதற்கடுத்து துல்கர் சல்மானுடன் சோலோ என்ற படத்தில் நடித்தார்.
இந்நிலையில் தன்ஷிகா 'தி ப்ரூஃப்' படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோசின் கீழ் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார். நடன இயக்குனரான ராதிகா மாஸ்டர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலரை நாளை சசிகுமார் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்போகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதனை பிரபல நடிகர் சசிகுமார் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
- தற்போது இந்த டிரெய்லர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
2006 - ம் ஆண்டு வெளியான 'திருடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தார்.
மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 -ம் ஆண்டு வெளிவந்த 'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார். அதன் பின் துல்கர் சல்மானுடன் 'சோலோ' என்ற படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது தன்ஷிகா 'தி புரூப்' படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோ சார்பில் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படத்தை ராஷிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று மதியம் டிரெயிலர் வெளியானது . இதனை பிரபல நடிகர் சசிகுமார் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
தற்போது இந்த டிரெய்லர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://youtu.be/pYfV1OfTLrE?si=kzSNuceL4IiNiTtV
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
- சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடலான ’டோண்ட் வரி டா மச்சி’ மற்றும் ’எதனால’ பாடல் வெளியானது.
நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அதனை காட்சி படுத்துவதில் ஆற்றல் பெற்றவர்.
ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடலான 'டோண்ட் வரி டா மச்சி' மற்றும் 'எதனால' பாடல் வெளியானது.
வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெயிலர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.