என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "train cancellation"
- 5 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
- பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது. மற்றும் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறியுள்ளது.
- ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
ஆவடி:
சென்னை ஆவடி ரெயில் நிலையத்தில் பழைய நடைபாதை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தது. இந்த பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நடைபாதை மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகளில் திடீரென்று காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலை 6.30 மணி வரை பணிகள் நடந்தன. இதையடுத்து இன்று காலை 6.30 மணி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலை நேரத்தில் ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் தவித்தனர். குறிப்பாக ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காலை 6.30 மணிக்கு பிறகு அரக்கோணம் மற்றும் திரு வள்ளூரில் இருந்த சென்ட்ர லுக்கு வரும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் பாதை யில் இயக்கப்பட்டதால் பட்டாபிராமில் இருந்து பட்டரவாக்கம் வரை இடை யில் உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.
இதன் காரணமாக இந்த ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மார்க்கத்தில் வந்த ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டன. இதனால் சென்ட்ரலில் இருந்து திரு வள்ளூர் மார்க்கத்தில் இன்று காலையில் செல்லும் 4 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு நெல்லூர் செல்லும் ரெயில், 5.40 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், 6.15 மற்றும் 6.20 மணிக்கு பட்டாபிராம் செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் இன்று காலையில் பயணிகள் தவித்தனர்.
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். அதன் பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இதற்கிடையே ஆவடி ரெயில் நிலையத்தில் நடை பாதை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்துவதில் மீதமுள்ள பணிகள் இன்று இரவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
- தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பகுதியளவு ரத்து மற்றும் வழித்தடம் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை - திருமங்கலம் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் ரத்து, பகுதியளவு ரத்து மற்றும் வழித்தடம் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வகையில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28, மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் தினசரி ரெயில் மார்ச் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு பகல்நேரத்தில் இயக்கப்படும் ரெயில் மதுரையில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக தற்போது விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள மேக்னசைட் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- இதையொட்டி இந்த வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள மேக்னசைட் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு-மேட்டூர் அணை ரெயில் (வண்டி எண்-06407) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 4 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் மேட்டூர் அணை-ஈரோடு ரெயில் (வண்டி எண்-06408) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் சேலம்-யஷ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண்-16212) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஓமலூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு யஷ்வந்பூர் செல்லும். இந்த ரெயில் சேவை சேலம்- ஓமலூர் இடையே இல்லை.
மேலும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) இயக்கத்தில் 45 நிமிடம் கால தாமதமாகவும், சேலம்-அரக்கோணம் ரெயில் (வண்டி எண்-16088) வருகிற 25-ந் தேதி ரெயில் இயக்கத்தில் 30 நிமிடமும் காலதாமதம் ஏற்படும். இந்த தகவல்கள் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்