என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "trains operational"
- மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
- கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரெயில்வே சேவையை ஞாயிற்றுக்கிழமையும் நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மெமு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் இந்த ரெயிலை ஞாயிற்றுக்கி ழமையும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, எல்.முருகன் கடிதம் எழுதியதோடு அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதையடுத்து மத்திய ரெயில்வே மந்திரி உத்தரவின் பேரில் கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரெயில்வே சேவையை ஞாயிற்றுக்கிழமையும் நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருகிற 11-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமையும் இனி மெமு ரெயில்கள் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று மெமு ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
மேட்டுப்பாளையம்- கோவை இடையிலான ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுவதால் வியாபாரிகள், மாணவர்கள் ஊட்டியில் இருந்து கோவை செல்லும் சுற்றுலாபயணிகள் பயன்பெறுவார்கள்.
இதன் மூலம் ரெயில் பயணிகள் சங்கத்தினர், வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி தமிழகத்துக்கு பல திட்டங்களை வழங்க தயாராக இருக்கிறார். பிரதமர் மோடி ரெயில்வே துறையை உலக தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போல நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ரெயில்வே கழிப்பறைகள் பயோ டாய்லெட்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான ரெயில் பயண கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது குறித்து எல்.முருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறிய தாவது:-
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து சேர இரண்டரை மணி நேரம் ஆகிறது. அதற்கு ரூ.27 வரை கட்டணமாக பெறுகி ன்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு 40 நிமிடத்தில் சென்று விடலாம். கொேரானா காலத்தில் பயணிகள் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக மாற்றப்பட்டு உள்ளன. அதை இங்கு மட்டும் செயல்படுத்த வில்லை. நாடு முழுவதும் செயல்படுத்தி உள்ளனர்.
அது மத்திய அரசின் கொள்கை முடிவு. கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்