என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Transport. Rail."
- பராமரிப்பு பணி காரணமாக மதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை
ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று (25-ந் தேதி) முதல் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அந்த வழியாக செல்லும் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மாதா வைஷ்ணவதேவி கட்ரா ரெயில் நிலையத்திலிருந்து ஜூலை 28, ஆகஸ்டு 4,11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரெயில்(16788), திருநெல்வேலியில் இருந்து ஜூலை 25, ஆகஸ்டு 1,8 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மாதா வைஷ்ணவதேவி கட்ரா விரைவு ரெயில் (16787), சண்டிகரிலிருந்து ஜூலை 25, 29, ஆகஸ்டு 1,5,8,12 ஆகிய நாட்களில் பறப்பட வேண்டிய மதுரை விரைவு ரெயில்(12688), மதுரையில் இருந்து ஜூலை 27, 31, ஆகஸ்டு 3, 7, 10, 14 ஆகிய நாட்களில் சண்டிகர் விரைவு ரெயில்(12687) ஈரோடு வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இதேபோல், ஓகாவில் இருந்து ஜூலை 29, ஆகஸ்டு 5,12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரெயில்(19568), தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24,31, ஆகஸ்டு 7 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஓகா விரைவு ரெயில் (19567), கச்சிக்குடாவில் இருந்து ஜூலை 30, ஆகஸ்டு 6,13 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரெயில்(17616) ஜூலை 31, ஆகஸ்டு 7,14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சிக்குடா விரைவு ரெயில் (17615), தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்டு 13 வரை புறப்பட வேண்டிய மைசூர் விைரவு ரெயில் (16236), மைசூரில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்டு 13 வரை புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரெயில்(6236) ஆகியவை ஈரோடு வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.