என் மலர்
நீங்கள் தேடியது "Travels"
- அவசரமாக எனக்கு ரூ.5 ஆயிரம் தேவைப்படுகிறது.
- தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 35).
டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரிடம் பேராவூரணி பகுதியை சேர்ந்த நிஷாந்தினி (30) என்பவர் நான் ஒரு டாக்டர்.
சென்னைக்கு அவசரமாக செல்ல வேண்டியுள்ளது.
கார் வாடகைக்கு வேண்டும் என கூறினார்.
இதையடுத்து யோகராஜ் காரில் மேரிஸ் கார்னரில் இருந்து நிசாந்தினியை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
அப்போது நிஷாந்தினி முதலில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார் .
அதன்படி யோகராஜ் காரை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டி சென்றனர். அங்கு காரை விட்டு இறங்கிய நிஷாந்தினி எனக்கு தெரிந்தவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
அவசரமாக எனக்கு ரூ.5000 தேவைப்படுகிறது.
அவரை பார்த்துவிட்டு உடனே வந்து விடுவேன்.
அதன் பிறகு சென்னைக்கு செல்லலாம்.
செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டு செல்போன் செயலி மூலம் உங்களது எண்ணுக்கு பணத்தை திருப்பித் அனுப்பி விடுகிறேன் என யோகராஜிடம் கூறினார்.
இதனை உண்மை என்று நம்பிய அவர் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு நிசாந்தினி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்வது போல் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த யோகராஜ் பல இடங்களில் தேடிப் பார்த்தார்.
கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்ப ட்டோம் என்பதை உணர்ந்தார்.
இது குறித்த அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த நிசாந்தினியை கைது செய்து விசாரித்தனர்.
முதல் கட்ட விசாரணையில் நிஷாந்தினி டாக்டர் கிடையாது என்பதும், திருச்சியிலும் ஒருவரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவரிடம் வேறு எங்காவது இது போல் நூதன முறையில் பண மோசடிகளில் ஈடுபட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.