என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "treatment plant"

    • குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தநிலையில் இன்று காலை அன்னூர் குறுக்கிலியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 4-வது குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தலைமை பொறியாளர் வெங்கடேஷ், செயற்பொறியாளர் கண்ணன் ,இளநிலைபொறியாளர் கோவிந்த பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் அந்த பகுதியில் கடலின் நிறம் மாறியுள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் மூலமாக நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் கடலில் நேரடியாக கலக்கிறது.

    பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் மாறிவிட்டாலும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர். சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் அந்த பகுதியில் கடலின் நிறம் மாறியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன்வளம் அழிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு அழிந்துவிட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எற்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×