என் மலர்
நீங்கள் தேடியது "Tremors"
- பூமிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று இரவு 7. 52 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்தியாவின் தாக்கம் பீகார், உத்தரபிரதேசம் முதல் டெல்லி வரை உணரப்பட்டது.
நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. பலர் நிலநடுக்கத்தின் லேசான அதிர்வுகளை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.
நேபாளத்தை மையமாக கொண்டு பூமிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று இரவு 7. 52 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நேபாளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பீகார், உத்தரபிரதேசம் முதல் டெல்லி வரை உணரப்பட்டது. சில இடங்களில் நில அதிர்வு மிகவும் லேசானதாக இருந்ததால் அவை மக்களால் நேரடியாக உணரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கை 3000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேற்று அதிகாலை முதல் காலை வரை 4 முறை நிலஅதிர்வு
- ரிக்டர் அளவில் 4.2, 2.7, 2.8 எனப் பதிவு
இந்தியாவின் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை உத்தரகாண்டில் நான்கு முறை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
முதல் நிலஅதிர்வு நேற்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 1.37, 2.18, 6.52 என மூன்று முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
2, 3 மற்றும் 4-வது நில அதிர்வு 2.7 மற்றும் 2.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் பிதோராகார்ஹ் மாவட்டத்தை சுற்றி நிகழ்ந்துள்ளது.
இந்தியா- சீனா எலலையில் மிலம் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நில அதிர்வை உணர்ந்ததாக, ராங்கோங்கில் உள்ள பூபால் சிங் தெரிவித்தார்.
- நிலநடுக்கம் அயோத்தியா நகருக்கு வடக்கே, மையம் கொண்டிருந்தது
- இது கடந்த 4 நாட்களில் நேபாளத்தை தாக்கும் 3-வது நிலநடுக்கம்
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் என்.சி.ஆர். (National Capital Region) எனப்படும் தேசிய தலைநகர் பகுதியில் இன்று மதியம் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று மாலை 04:15 மணியளவில், ரிக்டர் கணக்கில் 5.6 அளவாகவும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும், நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்தது. இந்த அதிர்வின் மையப்பகுதி உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியா பகுதிக்கு வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
கடந்த 4 நாட்களில் நேபாளத்தை தாக்கிய 3-வது நில அதிர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் ஏற்படுத்திய தாக்கம், தலைநகர் புது டெல்லியில் அதிர்வாக உணரப்பட்டது.
டெல்லியில், வீடுகளில் பொருட்கள் பலமாக குலுங்கியதாக மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெருமளவு கட்டிட சேதங்களோ அல்லது உயிர்சேதமோ ஏற்படவில்லை.
சில தினங்களுக்கு முன் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150 பேருக்கும் மேல் உயிரிழந்தனர். இப்பின்னணியில் இன்று ஏற்பட்ட டெல்லி நில அதிர்வால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
- 3 பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
- மக்கள் கட்டிடங்களின் மேல்தளத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
நில நடுக்கங்களுக்கு அதிக சாத்தியம் உள்ள நாடான ஜப்பானில், ரிக்டர் அளவுகோளில் 7.6 எனும் அளவில் வட மத்திய ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி நிறுவனம், இஷிகாவா, நிகாடா மற்றும் டொயாமா ஆகிய கடற்கரையோர பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தான் - கஜகஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று மாலை சுமார் 4.15 மணியளவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, பஞ்சாப், அரியானா, காஷ்மீர் மாநிலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் நிலநடுக்கமும், நில அதிர்வும் உண்டானது. இதனால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதம் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #DelhiEarthquake