என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Trichy police station"
- பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியின் தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பள்ளித் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் செழியன் மற்றும் முதல்வர் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் கைது.
மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியின் தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, பள்ளித் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் செழியன் மற்றும் முதல்வர் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் என்பவர் மேற்படி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவி என்பவரிடம் அவரது வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு 06.02.2025-ம் தேதி காலை 10.20 மணியளவில் மேற்படி மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி என்பவர் 06.02.2025-ம் தேதி இரவு 10.00 மணிக்கு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த எழுத்து மூலமான புகாரின் அடிப்படையில் மேற்படி 1) வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்), 2) பள்ளியின் தலைவர் மாராச்சி, 3) தாளாளர் சுதா, 4) துணை தாணளர் செழியன் மற்றும் 5) பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு தொடர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து எதிரிகளான ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1-வது எதிரி வசந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், காவல்துறையினர் இல்வழக்கில் விசாரணையை உடனடியாக மேற்கொண்டும் துரிதமாக செயல்பட்டும் வழக்கு பதிவு செய்து உடணடியாக ஐந்து எதிரிகளையும் கைது செய்தும், மேலும் இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களையும் மற்றும் ஆவணங்களையும் பரிசீலனை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப் அவர்களின் உத்தரவுடி புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து அரசு துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனிவரும் காலங்களில் மேற்படி விழிப்புணர்வு முகாம் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திர பாண்டியன் (வயது 60). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திலகம் (55). கட்டிட தொழிலாளியான இவரும் சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திலகம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டார்.
ஆனால் திலகம் ரோட்டில் செல்லும்போது விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக சவுந்திரபாண்டியனிடம் திலகத்தை வேலைக்கு அழைத்துச்சென்ற கொத்தனார் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் வழக்கை மாற்றி விட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
திலகம் வேலை பார்த்தது ஒரு போலீஸ்காரருக்கு சொந்தமான கட்டிடம் என்பதால் போலீசார் அவருக்கு ஆதரவாக இவ்வாறு வழக்கை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று சவுந்திரபாண்டியன் எடமலைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மதியம் 3 மணிக்கு சென்றுள்ளார். மனைவியை இழந்து ஒரே மகனுடன் சிரமப்படும் தனக்கு திலகம் வேலை பார்த்த கட்டிட உரிமையாளரிடம் இருந்து தனக்கு உதவி பெற்று தரும்படி போலீசாரிடம் அவர் கேட்க சென்றதாக கூறப்படுகிறது.
போலீஸ் நிலையம் சென்ற அவர் அங்குள்ள வாசலில் நின்றபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு மாரடைப்பால் இறந்து விட்டதாக அவரது மகனுக்கு எடமலைப்பட்டி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சவுந்திரபாண்டியனின் மகனை அழைத்த போலீசார் மாரடைப்பு ஏற்பட்டு சவுந்திரபாண்டியன் இறந்தார் என எழுதி வாங்கிக் கொண்டு உடலை ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் சவுந்திர பாண்டியன் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவில்லை என்றும் போலீசார் அவரை தாக்கியதால்தான் இறந்தார் என்றும் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
சவுந்திரபாண்டியனின் சட்டை கிழிந்து இருப்பதையும், அவர் உடலில் காயம் இருப்பதையும் கூறி இது குறித்து பிரேத பரிசோதனை செய்து உண்மையை கண்டு பிடிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சவுந்திர பாண்டியனின் உடல் நேற்றிரவு திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனையில் அவர் தாக்கப்பட்டாரா என்பது தெரிய வரும். இதற்கிடையே எடமலைப்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் நேற்று பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சவுந்திர பாண்டியன் வந்த போது என்ன நடந்தது என்பது பதிவு ஆகியிருக்கும். அதன் பிறகுதான் இதில் உள்ள மர்மம் விலகும் என கூறப்படுகிறது.