என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Triennial"
- குரங்கு தோப்பு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
- விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சாணாம்பட்டி அருகே குரங்குதோப்பு ஆர்.சி.அமலி தொடக்கப்பள்ளியில் கல்வி கலை கொடை எனும் முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.இந்த விழாவுக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். சித்தர் பீடம் விஜயபாஸ்கர், முருகேசன், ராமராஜன், முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் காந்தி வரவேற்றார். இந்தவிழாவில் பட்டிமன்ற நடுவர் சண்முக திருக்குமரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கல்வியின் அவசியம் பற்றி கவிஞர் ரோஸ்லின், கல்வியும், கலையும் பற்றி ஜோயல் ஆகியோர் பேசினார்.
இந்தவிழாவில் பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் முருகேசன், மாயி, பிரியா, ராஜூ, முத்துமீனாள், பூபதி, ரமேஷ், அமலா மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சேசுமரி ஸ்டெல்லா, கிரேஸ் அந்தோணியம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
- திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. முப்பெரும் விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
- ஓ.பி.எஸ். அணி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மதுரை
மதுரை அ.தி.மு.க. புற நகர் வடக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞரணி மாநில செய லாளர் ராஜ்மோகன், மாணவரணி துணை மாநில செயலாளர் ஒத்தகடை பாண்டியன், பேரவை மாநில இணைச்செயலாளர் சோலை குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் பேசும்போது கூறியதாவது:-
வருகிற 24-ந் தேதி திருச்சியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெறுகிறது. இந்த விழா முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நாயகன் ஓ.பி.எஸ். கரத்தினை வலுப்ப டுத்தும் வகையில் மாநாடு போல நடைபெறும்.
இந்த விழாவில் அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வரிசையாக வாகனங்களில் அணிவகுத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.
- மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
- விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.
மதுரை
மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியாயார் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தினம், புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்ல பாய்படேல் வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கே.வி.கே.ஆர். பிரபாகரன், தொழிலதிபர்கள் பிரான்சிஸ் பாண்டியன், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நூலினை தொழிலதிபர் நாகரத்தினம் வெளியிட்டார். அன்னை பாத்திமா கல்லூரி குழுமத்தலைவர் ஷா பெற்றுக்கொண்டார். இதில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்ற னர்.
முடிவில் புலவர் சங்கரலிங்கம் நூல் ஏற்புரை மற்றும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
- விருதுநகர் முப்பெரும் விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
- மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திரளானோர் கலந்து கொண்டு முதல்வரை வரவேற்க வேண்டும்.
மதுரை
அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்.
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருப்பாலையில் உள்ள திருமண மண்டபத்தில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் பால சுப்ரமணியன் தலைமை யில் நடந்தது.
பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், இலக்கிய அணி செயலாளர் நேரு பாண்டியன், இளைஞர் அணி அமைப்பாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி செயலாளர் மருதுபாண்டி முன்னிலை வகித்தனர்.
இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி பங்கேற்றார். அவர் பேசுகையில், வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் மதுரையில் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் அன்று மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திரளானோர் கலந்து கொண்டு முதல்வரை வரவேற்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் திரளான தொண்டர்களுடன் நாமும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கென்னடி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா, வக்கீல் கலாநிதி, பகுதி செயலாளர் சசிகுமார், ராமமூர்த்தி, மகளிர் அணி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சிறை செல்வன், தனசேகர், பசும்பொன் மாறன், வாடிப்பட்டி பால்பாண்டி, வக்கீல் கார்த்திக்,ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்