என் மலர்
நீங்கள் தேடியது "truck seizure"
- விருத்தாசலம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
- தப்பியோடிய புலியூர் டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் கோ.பூவனுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. டிரைவர் தப்பியோடினார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை, பறிமுதல் செய்தனர். தப்பியோடிய புலியூர் டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.