என் மலர்
நீங்கள் தேடியது "Truk"
- தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்ட வருவதாக புகார் இருந்து வருகிறது.
- கேரளாவில் கனிம வளங்களை சுரண்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது.
கோவை:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்ட வருவதாக புகார் இருந்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கற்கள் அதிகளவிற்கு கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த லாரிகளை அவ்வப்போது பொது மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
குறைந்த அளவு கருங்கற்கள் ஏற்றி செல்ல அனுமதி வாங்கிவிட்டு அதிக அளவிலான கருங்கற்களை கொண்டு செல்வது, ஒருமுறை அல்லது இரண்டு முறை கருங்கற்கள் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்று விட்டு பலமுறை கருங்கல்களை கொண்டு செல்வது என்று விதிமீறல்கள் நடந்து வருகிறது.
கேரளாவில் கனிம வளங்களை சுரண்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு கேரளாவில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதை தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்பது இயற்கையாக அவர்களின் புகாராக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற லாரி இன்று காலை கோபாலபுரம் -நெடும்பாறை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.