என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Turicorin"
- தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த மகேஷ் இவரது மகன் அஜயை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார்
- எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகேஷ்.
பள்ளி மாணவன்
இவரது மகன் அஜய் ( வயது 12) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக அஜயை மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
தாளமுத்து நகர் அருகே உள்ள ராஜபாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்றபோது தண்ணீர் லாரியை முந்தி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
அப்போது லாரி அஜய் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக லாரி டிரை வரை பிடித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி முத்தை யாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ்சுடலை (வயத25). இவர் முத்தையாபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
- நாங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி எனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் முத்தையாபுரத்தில் வசித்து வந்தோம்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தை யாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ்சுடலை (வயத25). இவர் முத்தையாபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
காதல் திருமணம்
நான் தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். நானும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நவ்சின்பானு என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அதற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நாங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி எனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் முத்தையாபுரத்தில் வசித்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த மாதம் எங்கள் வீட்டிற்கு வந்த எனது மனைவியின் பெற்றோர் பழைய சம்பவங்களை மறந்து விட்டோம் என கூறினர். பின்னர் அவர்கள் திரும்பி செல்லும் போது நவ்சின்பானுவை அழைத்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் போன் செய்து எனது மனைவியை அழைத்த போது அவர் என்னுடன் வரமாட்டார் என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இதற்கிடையே நவ்சின்பானு எனக்கு போன் செய்து அவரை துன்புறுத்துவதாகவும், நான் அவரை அழைத்து செல்லுமாறும் கூறினார். எனவே எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இது தொடர்பாக டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்