என் மலர்
நீங்கள் தேடியது "turmeric water"
- முத்துமாரியம்மன் கோவில் தீமிதித்து வழிபாடு நடந்தது.
- நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. விஸ்வகர்மா மகாசபை சங்கம் நடத்தும் 155-ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2-வது வெள்ளிக்கிழமை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அழகு குத்தி வந்து கோவில் முன்புறம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவழும் பிள்ளை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து வானவேடிக்கையோடு சாமியாடி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.
- இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள்நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
- திருமண தடங்கல் நீங்குவதற்காக இந்த அபிஷேகம் செய்யப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி ஒன்றிய பகுதிகளான குருநாதபுரம், கரிசன்விளை, குமாரலெட்சுமிபுரம், அம்மன்புரம், செம்மறிகுளம், திருப்பணி, சத்யாநகர், வடலிவிளைஆகிய 8 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள்நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் ஒரு குடத்தை எடுத்து, விலாமிச்சவேர், வெட்டிவேர், அதில்பச்ச கற்பூரம், மஞ்சள் பொடி ஆகியவை குடத்து தண்ணீரில் போட்டு வழிபாடு செய்து பின்பு அந்த குடத்து தண்ணீரை மாரியம்மன் விக்ரகத்திற்கும் அம்மன்புரம் விநாயகர் கோவிலிலும் கொண்டு மஞ்சள் நீர்அபிஷேகம் நடைபெற்றது.
வீடுகளில் திருமண தடங்கல் நீங்குவதற்காகவும், வீடுகள் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், நோய் நொடிகள் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இந்த அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி சந்தனக்கனி, ஒன்றிய செயலாளர் ஜெயசித்ரா, பொறுப்பாளர்கள் சக்திகனி, செல்வலட்சுமி, தங்கேஸ்வரி, சீதாலட்சுமி, மணியம்மாள், தேவி, முத்து, சுயம்புகனி, மது, ஜெயராணி, பொங்கல்மலர், பவித்ரா, சந்தியா, சபிதா, பொன் செல்வி, கலைராணி, பிரம்மசக்தி, ரதிதேவி,
பிரிதா, வனசுந்தரி, அன்னபுஷ்பம், லதா, ரதீஸ்வரி, மகேஸ்வரி, மீனாட்சி, வேலாச்சி, பத்மா, மணிகண்டேஸ்வரி, சந்திரா, வாசுகி மற்றும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி பொறுப்பாளர் லிங்கம், அருண், அம்மன்புரம் கோவில் நிர்வாக தலைவர் குருநாதன், முருகன், அழகேசன், ஆதிலிங்கம், இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளரும் கேசவன் வழி நடத்தினார்.