என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "turtle"
- முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
- ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
பொன்னேரி:
நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன.
இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
இதற்கிடையே பழவேற்காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து வருகின்றன. படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி காயம் அடைந்து அவை இறப்பதாக ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன.
- மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும்.
திருவொற்றியூர்:
மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது எண்ணூரில் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வெளியேறி எண்ணெய் கழிவு கடல் மற்றும் முகத்துவார பகுதியில் கலந்தது. இதனால் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதம் அடைந்தன. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதை த்தெடர்ந்து எண்ணூரை சுற்றி உள்ள மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையே கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் ஜனவரிமாதத்தில் கரைக்கு கூடுகட்ட வரும் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? ஆமைகள் கூடுகட்ட வரும் கரையில் பாதிப்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வனத்துறையினர் கடந்த 12-ந்தேதி சிறப்பு குழுவை நியமித்தது.
இந்த குழுவினர் எண்ணெய் கழிவு படர்ந்த எண்ணூர் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தது. இதில் எண்ணெய் கழிவுகளால் ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,
எண்ணூர் கடல்பகுதியில் பரவிய எண்ணெய் கழிவால் ஆமைகளுக்கு பாதிப்பு இல்லை. அவை ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கூடு கட்டி முட்டையிட கடற்கரைக்கு வரும். எண்ணூர் முகத்துவாரத்தில் கசிவு ஏற்பட்டதாலும், எண்ணெய் கழிவு கடலில் அதிகம் பரவாததாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும், எண்ணூர் அருகே உள்ள கடற்கரையில் கற்கள்தான் அதிகஅளவில் உள்ளன. மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும். இதனால் ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வருதில் எந்த பாதிப்பும் இருக்காது. எண்ணெய் கழிவால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கு மட்டும் பாதிப்பு உள்ளது என்றார்.
- காமராஜபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்ளது.
- விலங்குகள் நல ஆா்வலா் ஆமையை உயிருடன் மீட்டாா்.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில், தாராபுரம் சாலையிலுள்ள காமராஜபுரத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்ளது. இதன் அருகில் இருக்கும் போா்வெல் குழிக்குள் ஒரு ஆமை விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதனைப் பாா்த்த பொன்பிரபு என்பவா் வெள்ளக்கோவில் விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தாா். விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜ் ஆமையை உயிருடன் மீட்டாா். பின்னா், காங்கயம் வனத் துறையினரின் அறிவுறுத்தல்படி, செம்மாண்டம்பாளையம் குட்டையில் ஆமை விடப்பட்டது. ஆமையை மீட்ட விலங்குகள் நல ஆா்வலரை பொதுமக்கள் பாராட்டினா்.
‘யாங்ட்ஷி’ என்று அழைக்கப்படும் ஆமைகள் தான் உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட ஆமைகளாக அறியப்படுகின்றன. வரைமுறையற்ற வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் இந்த வகை ஆமைகள் பேரழிவைச் சந்தித்தன.
இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில் 2 ஆமைகள் சீனாவில் உள்ள ஷூஷோ உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவற்றில் ஒன்று ஆண் ஆமை, மற்றொன்று பெண் ஆமை ஆகும். மற்ற 2 ஆமைகளும் வியட்நாமில் உள்ளன.
இந்த நிலையில், சீனாவின் ஷூஷோ உயிரியல் பூங்காவில் இருந்த 90 வயதான பெண் ஆமை வயது மூப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது. யாங்ட்ஷி இனத்தின் கடைசி பெண் ஆமையும் இறந்துவிட்டதால், இனப்பெருக்கம் அடைய முடியாத நிலையில் அந்த ஆமை இனம் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Yangtze #Turtle
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்