என் மலர்
நீங்கள் தேடியது "Tysaiyanvilai"
- பொங்கல் விழாவில் நெல்லை மாவட்ட திட்ட துணை அலுவலர் சுமதி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைஅலுவலர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.
- பொங்கல் விழா கொண்டாட்டத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர் நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தி னராக நெல்லை மாவட்ட திட்ட துணை அலுவலர் சுமதி மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைஅலுவலர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலராடை அணிந்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் 4 குழுவாகப் பிரிந்து பொங்கலிட்டனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் தீ மூட்டி அடுப்புப் பற்ற வைத்தனர். கதிரவனால் விளைந்த நெல், காய்கறிகள், பழங்கள், கரும்பு ஆகியவற்றை கதிரவனுக்கு படைத்து வழிபட்டனர். பல வகையான உணவு வகைகளை படைத்தனர். பொங்கலுக்கு அடிப்படை காரணமாக உழவுக்கும், உழவர்களுக்கும் வந்தனை செய்யும் விதமாக உழவர்கள் பயன்படுத்தும் ஏர் கலப்பை, மாட்டு வண்டி, மண்வெட்டி போன்ற கருவிகளையும் அலங்கரித்து வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. ஆசிரியர்களுக்கும் தனிப்போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள். அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
- காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
- திசையன்விளை மனோ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
திசையன்விளை:
திசையன்விளை மனோ கல்லூரி முன்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
காமராஜர் ஆட்சிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிக்கூடங்களை திறந்ததால், கல்வி கற்றவர்களின் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்ந்தது. எனவேதான் காமராஜரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் புதிய கல்விக்கூடங்களை கட்டுவதற்கு ரூ.1,000 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த கல்விக்கூடங்களுக்கு காமராஜர் பெயரை சூட்டி பெருமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
திசையன்விளை மனோ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்லூரிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கு ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இக்கல்லூரியானது இந்த ஆண்டில் அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவிகள் மனு
திசையன்விளை பஸ் நிலையத்தில் இருந்து மனோ கல்லூரிக்கு அரசு டவுன் பஸ் சேவையை நீட்டித்து தர வேண்டும் என்று மாணவிகள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திசையன்விளை, குருகாபுரம், நந்தன்குளம், எருமைகுளம், ரோச் மாநகர், ஆனைகுடி, பொத்தகாலன்விளை, இடையன்குடி, இலக்கரிவிளை, காரம்பாடு, அப்புவிளை உள்ளிட்ட 13 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
- கடந்த 11-ந் தேதி முதல் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
மேலும் தினமும் பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று 19 -வது நாளாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் போராட்டக்குழு தலைவர் ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் போராட்ட பந்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. மாநில மீனவர் அணிசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பங்குதந்தை வில்லியம் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறியதாவது:-
கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க சபாநாயகர் அப்பாவு தீவிர முயற்சி செய்துவருகிறார். சென்னை யில் மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து தூண்டில் வளைவு அமைப்பதற்கான முயற்சி களை செய்துவருகிறார்.
நாளை (வெள்ளிக் கிழமை) அதற்கான ஆணை பெற்று விடுவதாக உறுதியளித்துள்ளார். 3 மாதத்திற்குள் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- தச்சை கணேச ராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திசையன்விளை:
திசையன்விளை நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலைய சந்திப்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வி.பி.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட மகளிரணி செயலாளரும் ,திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் பால்துரை, அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், நீர் வழங்கப்பட்டது.
- திசையன்விளை, நாங்குநேரி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- கோவநேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும்.
வள்ளியூர்:
வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட திசையன்விளை, கோட்டைகருங்குளம் மற்றும் நாங்குநேரி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால் திசையன்விளை துணைமின் நிலையத்திற்குட்பட்ட திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கோட்டைகருங்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், நான்குநேரி துணைமின் நிலையத்திற்குட்பட்ட நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி மற்றும் பக்கத்து கிராமங்களில் மின் வினியோகம் தடைப்படும்.
மேலும் மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையினை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விழா நடந்தது.
- விழாவில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விழா நடந்தது. திசையன்விளை லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் தலைமை தாங்கினார். கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் டிம்பர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் இந்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- வாழை தோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
- ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே குமாரபுரம் பஞ்சாயத்து வாழை தோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து திசையன்விளை பேரூராட்சி சண்முகபுரத்தில் உயர்கோபுர மின் விளக்னை இயக்கி வைத்தார். விழாவில் திசையன்விளை பேரூராட்சிகவுன்சிலர்கள் நடேஷ் அரவிந்த், கமலா, சுயம்புராஜன், பொன்மணி நடராஜன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், குமாரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆனிஷா பயாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன.
- வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பை வழங்கப்படுகிறது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா க.உவரியில் மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இப்போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் போட்டியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், சுழற்கோப்பையும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமெச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், க.உவரி ேஜக்கப், ரமேஷ், எழில் ஜோசப், காமில், சுடலைமணி, முத்தையா, டென்னிஸ் மற்றும் விளையாட்டு வீரர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார்.
- மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
திசையன்விளை:
சி.பி.எஸ்.இ. ெபாதுத் தேர்வில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார். மேலும் பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
- சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.
- கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி. எஸ். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.
இதில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர். பாலர் கல்வி, தொடக்க கல்வி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி என்ற அடிப்படையில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.
மேலும் வருகிற கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எந்தெந்த நூல்களை பயன்படுத்தலாம் என்றும், அவர்களின் கையெழுத்து சீர்பெற கையெழுத்து பயிற்சி ஏடுகளை தொடக்கக் கல்வி நிலையிலேயே அறிமுகப்படுத்தி இந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிப்பது குறித்தும் கலந்தாய்வு செய்தனர். இக்கூட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பள்ளியின் முதல்வரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- சிறப்பு விருந்தினராக அம்பை ஒன்றிய சேர்மன் பரணிசேகர் கலந்து கொண்டார்.
- தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் எடுத்து கூறினார்.
திசையன்விளை:
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான 2 ஆண்டு கால ஆட்சி முடிவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின் படி, தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் ஈடில்லா ஆட்சி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் க.புதூர் பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபிந்தர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளரும், அம்பை ஒன்றிய பெருந்தலைவர் பரணிசேகர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்து கூறினார்.மேலும் அரசு எவ்வாறு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.இலவச மகளிர் திட்டம் மற்றும் அரசு அமைந்த பிறகு பகுதிகளில் நடைபெற்ற, நடந்து முடிந்த மற்றும் நடக்க உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்து கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு, ஒன்றிய கவுன்சிலர் நட ராஜன், இசக்கி பாபு, பிரேமா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம் அமைச்சியார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் கெனி ஸ்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரு கன், ஊராட்சி மன்ற தலை வர்கள் ராதிகா சரவண குமார், பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சாந்தா மகேஷ்வரன், மணி கண்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், நடேஷ் அரவிந்த், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜ சேகர், பொற்கி ழி நடராஜன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராம கிருஷ்ணன், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர், எழில் ஜோசப், டெ ன்னிஸ், காமில், சாகுல், கோகுல், சுடலை மணி, முத்தையா, ஸ்டா ன்லி, சுபாஷ், சுரேஷ், முத்து, ராஜா, வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தங்களிடம் இருப்பதைக் கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை குறுநாடகம் மூலம் மாணவர்கள் நடித்துக் காட்டினர்
- நம்மை நாமே மகிழ்வுடன் வைத்திருக்க பழக வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறினர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. 9-ம் வகுப்பு மாணவர்கள் காலை வழிபாடு நடத்தினர். சிறப்பு நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்களிடம் இருப்பதைக் கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை குறுநாடகம் மூலம் நடித்துக் காட்டினர். வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து கிடைப்பதல்ல. நாமே எல்லாவற்றையும் நேர்மறையான சிந்தனையுடன் எதிர்கொண்டு நம்மை நாமே மகிழ்வுடன் வைத்திருக்க பழக வேண்டும் என்று கூறினர்.
மேலும் பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பேசும் போது, மகிழ்ச்சி என்பது பிறரிடம் இருந்து கிடைப்பதல்ல நமக்கு வரும் சூழல்களை நாமே எளிதாக எதிர்கொண்டு நம் உள்ளத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டு பிறரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.