என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ukraine Russia Clash"
- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது கடினம் என்று கருதினால், ஒரே நேரத்தில் கூடுதல் இடங்களை உருவாக்கி தனியார் கல்லூரிகளில் சேர அனுமதிக்கலாம்.
உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கி கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கல்வி பயில இடம் ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இதை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிலைப்பாடு மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், "உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை நாட்டிற்குள்ளேயே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் ஒதுக்கலாம் என வெளிவிவகார மக்களவைக் குழு பரிந்துரைத்தது மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், மத்திய அரசு எடுத்துள்ள இதற்கு மாறான நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதுபோன்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது கடினம் என்று கருதினால், ஒரே நேரத்தில் கூடுதல் இடங்களை உருவாக்கி தனியார் கல்லூரிகளில் சேர அனுமதிக்கலாம். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதே அளவிலான கட்டணத்தைச் செலுத்தி கல்வியைத் தொடர முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
- கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தாக்கியது.
- பயங்கரவாதிக்கு எதிராக போரில் பங்கேற்று அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி தலிதா டோவாலே போரில் பங்கேற்றார்.
துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தாக்கியது.
இதில் தலிதா டோவாலே பலியானார். இவர் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிக்கு எதிராக போரில் பங்கேற்று அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். தற்போது உக்ரைன் மீதான போர் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மரியு போல் நகரில் ரஷிய படையிடம் ஆயிரம் உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் ரஷியா அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஒப்படைக்கப்பட்ட வீரர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
மரியுபோல், ஜூன். 8-
உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி 100 நாட்களை கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷிய வீரர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்துடன் போர் செய்து வருகிறார்கள்.
இந்த போரில் இருதரப்பி லும் கடுமையான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள துறைமுகநகரான மரியுபோல், கெர்சன் உள்ளிட்ட நகரங்களை ரஷியா தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷியா மும்முரம் காட்டி வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக இங்குள்ள சியெவெரோ டொனட்ஸ்கி, லுஹான்ஸ்ட் நகரங்கள் மீது ரஷிய படைகள் கண் மூடித்தனமாக தாக்கி வருகிறது. 24 மணிநேரமும் இந்த நகரங்கள் மீ து குண்டு மழையினை பொழிந்து வருகிறது. இதில் பள்ளி- கல்லூரி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து சேதமானது.
இந்த நகரங்களை முற்றி லும் அழிக்கும் முயற்சியில் ரஷியா முழுமூச்சில் இறங்கி உள்ளது. உக்ரைனின் கிழக்கு பிராந்திய பகுதி களை 97 சதவீதம் கைப்பற்றி விட்டதாக ரஷியா அறி வித்து உள்ளது.
இந்த நிலையில் மரியு போல் நகரில் ரஷிய படையிடம் ஆயிரம் உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் ரஷியா அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மரியுபோல் நகரில் இரும்பு ஆலை மீது கடந்த 3 மாதங்களாக ரஷியா கடுமையான தாக்குதலை நடத்தியது. வான்வெளி மற்றும் கடல் வழியாக நடந்த இந்த போரில் பலர் கொல்லப்பட்டனர்.
இதில் மரணம் அடைந்த 210 உக்ரைன் வீரர்கள் உடல்களை ரஷியா ஒப்படைத்து உள்ள தாக அந்தநாட்டின் ராணுவ புலனாய்வு ஏஜென்சி தெரிவித்து உள்ளது. ஆனால் அந்த இரும்பு ஆலையில் இன்னும் எத்தனை வீரர்களின் உடல்கள் உள்ளது என தெரியவில்லை என்று அந்த ஏஜென்சி தெரிவித்து இருக்கிறது.
ஒப்படைக்கப்பட்ட வீரர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
- உக்ரைன் போரால் படிப்பை கைவிட்டவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தி.மு.க. அரசுக்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே கடும் போர் நடைபெற்று வருவதன் காரணமாக, உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை பயின்று வந்த மாணவ, மாணவியர் உட்பட அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில், அங்கு பயின்று வந்த மருத்துவப் படிப்பை பாதியிலே விட்டுவிட்டு, அதனை இந்தியாவிலும் தொடர முடியாமல் தவித்துக் கொண்டிருப்போர் சுமார் 14,000 பேர் என்றும், இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 1,896 பேர் என்றும், இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தமிழ்நாடு, உக்ரைன் எம்.பி.பி.எஸ். மாணவர்-பெற்றோர் சங்கம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக பணம் கொடுத்து படிக்க முடியாத சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள்-பணத்தையும் செலவு செய்துவிட்டு, மருத்துவப் படிப்பை எப்படி தொடரச் செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். உக்ரைனில் நிலவும் அசாதாரண நிலையைச் சுட்டிக்காட்டி, சிறப்பு நேர்வாக, அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கும் வகையில், வழிகாட்டி நெறிமுறைகளை தளர்த்த மத்திய அரசை வலியுறுத்தி அதற்கான உத்தரவை பெற்றுத் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவுகிறது. இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தி.மு.க. அரசுக்கு உள்ளது.
எனவே, போர் சூழல் காரணமாக உக்ரைனில் பாதியிலே மருத்துவப் படிப்பினை விட்டுவிட்டு வந்துள்ள மாணவ, மாணவியர் இந்தியாவில் அதனைத் தொடரும் வகையில், மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தினைக் கொடுத்து, சாதகமான உத்தரவினைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்