search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN Report"

    காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஐ.நா. அறிக்கை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். #UNReport #BipinRawat
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலும், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மனித உரிமை மீறல் நடப்பதாகவும், இதில் ராணுவமும் ஈடுபடுவதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதை நிராகரித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஒருதலைப்பட்சமானது எனக்கூறி கண்டனமும் பதிவு செய்தது.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராணுவ தளபதி பிபின் ராவத்திடம், ஐ.நா. அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்திய ராணுவத்தின் மனித உரிமை அறிக்கை குறித்து பேசுவதற்கு தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது அனைவருக்கும் நன்கு தெரியும். காஷ்மீர் மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நன்கு தெரியும்’ என்று கூறினார்.

    எனவே ஐ.நா. அறிக்கை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை என்று கூறிய பிபின் ராவத், இத்தகைய சில அறிக்கைகள் தூண்டுதலின் பேரில் தயாரிக்கப்பட்டவை என்றும், இந்திய ராணுவத்தின் மனித உரிமை பேணும் தரவுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை என்றும் தெரிவித்தார்.  #UNReport #BipinRawat #Tamilnews 
    காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அளித்த அறிக்கையை இந்தியா இன்று நிராகரித்துள்ளது. #Kashmir #HumanRights #UNReport
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. சபை வெளியிட்ட முதல் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.

    ஆனால், ஐ.நா சபை வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சபையின் மனித உரிமை மீறல் மீதான அறிக்கை வெளிப்படையான பாரபட்சம் மற்றும் தவறான கதையை உருவாக்கும் முயற்சி ஆகும்.



    ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல், முரண்பாடானது. இதுபோன்ற அறிக்கைக்கான உள்நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புகிறோம்?

    ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப் பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது. பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொகுப்பைக் கொண்டு திட்டமிடப்பட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது. #Kashmir #HumanRights #UNReport
    ×