search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unhindered pursuit"

    • மேல்நிலை கல்வியை தடையில்லாமல் படிக்க சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
    • செந்திகுமார நாடார் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 131 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    கிராமப்புரங்களில் ஏழ்மையில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிள்ளைகளை பல்வேறு குடும்ப சூழ்நிலையின் காரணமாக 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டு மேல்நிலைக்கல்வி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    அனைத்து தரப்பு மாண வர்களும் மேல்நிலைக் கல்வியை தடைபெறாமல் கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இந்த விலையில்லா சைக்கிள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 2023-24ம் நிதியாண்டில் 7 ஆயிரத்து 699 மாணவர்களுக்கும், 9 ஆயிரத்து 982 மாணவிக ளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    முதற்கட்டமாக மல்லாங்கிணர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 161 மாணவர்களுக்கும், செந்திகுமார நாடார் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 131 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொ) முத்துக்கழுவன், மல்லாங்கி ணர் பேரூராட்சி தலை வர்கள் துளசிதாஸ், செந்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×