என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Urban"
- அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
- தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது
காலநிலை மாற்றம் :
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஆய்வு முடிவுகள் :
அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?
தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.
தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.
வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.
மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
- மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.
- விண்ணப்பங்களை 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் டி.எஸ்.கே., நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். நேர்முக தேர்வு 25 ம் தேதி நடக்குமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள, தற்காலிக நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பதிவு தபால் மூலமாக கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு, 20ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்