என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "uriyadi"
- 'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம்,
- மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். படத்தின் பாடலான எலக்சன் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 1 மில்லியன் பார்வையை இதுவரை பெற்றுள்ளது.
அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது.
படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். உறியடி மற்றும் உறியடி 2 வெற்றியைத் தொடர்ந்து விஜய்குமாருக்கு இப்படமும் வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எலக்சன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
- 'எலக்சன்' என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.
'உறியடி', 'ஃபைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எலக்சன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
'சேத்துமான்' புகழ் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜயகுமாருடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது. படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன.
'எலக்சன்' என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலக்சன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது.
- படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன.
'உறியடி', 'ஃபைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
'சேத்துமான்' புகழ் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜயகுமாருடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது. படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன.
இந்தநிலையில் இப்புதிய படத்திற்கு'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜயகுமாருக்கு இளம் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். துணிச்சலாக ஆரம்பத்திலேயே அரசியல் கதையில் அவர் நடித்துள்ளது ரசிகர்களை வியக்க வைத்தது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- வழுக்கு மரம், உறியடி போட்டியில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குழந்தைகள், கையில் புல்லாங்குழலுடன், கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து கலந்து கொண்டனர்.
கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணன் திருவுருவ சிலை மேளதாளம் முழங்க கிரா மங்களில் உள்ள வீதிகளில் உலா வந்தது. இதில் பலர் கிராமத்தில் உள்ள மஞ்சள் நீர் குடங்களுடன் ஊர்வ லத்தில் கலந்து கொண்டனர்.
மஞ்சள் நீரை ஊற்றி மஞ்சள் நீராடினர். கிருஷ்ணன் வேடத்தில் இருந்த இளைஞர் உறியடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராள மான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் 30 அடி உயர வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.
உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊர் நாட்டாமை அழகர்சாமி பரிசுகள் வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அச்சம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மல்லிகா பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
- சோழவந்தான் அருகே கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட மேல்நாச்சிகுளம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதே போல் இந்த ஆண்டு 3 நாட்கள் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முக்கிய விழாவான உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் டிரைவர் கண்ணன் (வயது41) இளவட்டக் கல்லை தூக்கி போட்டியில் வெற்றி பெற்றார். இங்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 4 அடியில் கிருஷ்ணர் சிலை நிறுவப்பட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றவுடன் இந்த சிலை குலுக்கல் முறையில் கிராமத்தில் உள்ள பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் இந்த ஆண்டு நேற்று இரவு கிருஷ்ணர் ஜெயந்திக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலை பூஜைகள் நிறைவு பெற்று குலுக்கல் முறையில் மேல்நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல் நாச்சிகுளம் கிராமமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
- கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.
- திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரிய திருத்தலமாகும்.
புதுவை முத்தியால்பேட்டை தெபேசன்பேட் வீதியில் வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.
நெசவு தொழில் செய்து வந்த பத்மசாலிய சமூகத்தினர் இதை உருவாக்கினர். முதலில் மூலிகைகளாலும் தங்க இழைகளாலும் உருவாக்கப்பட்ட கிருஷ்ணனின் படங்கள் வைக்கப்பட்டு இங்கு பஜனை நடந்து வந்தது. பின்னர் 1922-ல் வேணுகோபால சுவாமியாக சிலை அமைக்கப்பட்டது.
இங்கு பத்மசாலியர்களின் குலதெய்வமான பாவண மகரிஷி மற்றும் அவரது மனைவி பத்ராவதி அம்மை ஆகியோருக்கும் சிலை உள்ளது. சந்தான கிருஷ்ணனின் உருவமான குழந்தை கிருஷ்ணனுக்கும் இங்கு சிலை வழங்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயருக்கு என தனி சன்னிதி உள்ளது. தமிழ், தெலுங்கு புத்தாண்டு நாட்களில் இங்கு விஷேச பூஜை நடைபெறும். ஆடி பூரம், பங்குனி மாத ராமநவமி, மார்கழி மாத ஏகாதசி அனுமன் ஜெயந்தி நாட்களிலும் இங்கு விசேஷ பூஜைகளை காண பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
கிருஷ்ணஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் தாழி அலங்காரம் செய்யப்பட்டு உறியடி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடக்கிறது. மாசிமாத தீர்த்த வாரியில் வேணுகோபால சுவாமி உற்சவரும் கலந்து கொள்கிறார்.
இந்த கோவில் திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரியது ஆகும். மேலும் இங்கு சந்தான கிருஷ்ணரும் அருள்பாலிப்பதால் குழந்தை வரமும் வழங்கும் கோயில் என்கிற ஐதீகமும் உள்ளது. இங்கு உள்ள ஆஞ்சநேய சுவாமி நவக்கிரக தோஷ நிவர்த்தி வழங்குகிறார்.
- குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில்கிருஷ்ணர் காட்சி தருகிறார்.
- காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.
குழந்தை வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.
இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.
மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.
மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.
இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரில் உள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
முன்மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.
பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது.
குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.
அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.
இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற் சவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார்.
இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.
ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்ப அபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி கிடைக்கும்.
- உறியடி திருவிழா 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது.
சைவ தலங்களுக்கு புகழ் பெற்ற மதுரையில் வைணவத்தலங்களும் குறைவின்றி உள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாகதான் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது கிருஷ்ணஜெயந்தி. இந்த விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடும் ஆலயங்களில் ஒன்று, ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், பெயரில் பெருமாள் என இருந்தாலும் மதுரை பகுதி மக்களின் உச்சரிப்பில் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்றே கூறப்படுகிறது.
இதற்கு காரணம் இந்த கோவிலின் ஆதிமூர்த்தி ஸ்ரீநவநீதகிருஷ்ணன் என்பதால் தான். சவுராஷ்டிர சபைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் அமைந்துள்ள வீதியின் பெயரும் கிருஷ்ணன் தெற்கு தெருதான்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தூவாரகை கிருஷ்ணனை மனதில் கொண்டு இங்கு நவநீதகிருஷ்ணன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து சவுராஷ்டிரா சமூக மக்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். அப்போது முதலே இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளடைவில் கோவிலை வழிபட்டோர் கனவில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரர் பெருமாள் பிரசன்னமாகி தன்னையே பிரதிஷ்டை செய்ய சொன்னதால் ஆலயம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயமாக உருமாறியதாக வரலாறு கூறுகிறது.
கோவிலின் திருநாமம் மாறினாலும், ஆதிமூர்த்தியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபடுவதை பக்தர்கள் கைவிடவில்லை. இதனால் இங்கு கொண்டாடப்படும் உறியடித் திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு வாய்ந்த விழாவாக அமைந்துள்ளது.
உறியடி திருவிழாவுடன் நடைபெறும் கிருஷ்ணஜெயந்தி விழா இக்கோவிலின் ஆன்மீக பக்தர்களால் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது நவநீதகிருஷ்ணன் உற்சவம் தங்கத் தொட்டிலிலும், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், தங்கப் பல்லக்கிலும் வீதி உலா செல்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி, புத்ர பாக்கியம் கிடைப்பது உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இன்றளவும் சுவாமிக்கு பூஜை, நெய்வேத்தியம்., வெண்ணெய் சாத்தி அர்ச்சனை வழிபாடு போன்றவற்றை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு 13 அடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர். மதுரையில் வேறு எங்கும் இதுபோன்று சுதையில் (கற்சிலை) ஆஞ்சநேயர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுரையில் புகழ்பெற்ற கூடழலகர் பெருமாள் கோவில், மதன கோபாலசுவாமி கோவில், வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் போன்றவற்றிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- 'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்குமார்.
- இவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்குமார். இவர் தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகிகளாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ரிச்சா ஜோஷி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
படக்குழு
மேலும், இந்த படத்தில் 'வத்திக்குச்சி' திலீபன், 'கைதி' ஜார்ஜ் மரியான், 'வடசென்னை' பாவல் நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரீல் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்