search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uruguay"

    • அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    இதனிடையே அரையிறுதியில் தோல்வியை தழுவிய கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 8-வது நிமிடத்தில் உருகுவே தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    மறுபுறம் கனடா அணி போட்டியின் 22-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. இதன் காரணமாக இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் அடுத்த கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டினர். எனினும், முதல் பாதியில் கனடா 1-1 உருகுவே அணிகள் சமநிலையில் இருந்தன.

     


    இதைத் தொடர்ந்து 2-வது பாதியில் வெகு நேரம் ஆகியும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாத அளவுக்கு போட்டி நெறுக்கமாக இருந்தது. போட்டியின் 80-வது நிமிடத்தில் கனடா அணி தனது 2-வது கோலை அடித்து முன்னிலை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 90-வது நிமிடத்தில் உருகுவே அணியும் தனது 2-வது கோலை அடித்ததால் போட்டி மீண்டும் சமனுக்கு வந்தது. இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்களால் வெற்றிக்கான கோல் அடிக்க முடியாமல் போனது.

    இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் 3-4 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது அசத்தியது. இதன் காரணமாக நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே மூன்றாவது இடம்பிடித்தது.

    • உருகுவே மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
    • பனமா இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று காலை இரண்டு போட்டிகள் நடைபெற்றன. குரூப் "சி"யில் இடம் பிடித்துள்ள பனமா- பொலிவியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பனமா 3-1 என பொலிவியாவை வீழ்த்தியது.

    ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் பனமா வீரர் ஜோஸ் பஜார்டோர் முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் பனமா 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது நேர ஆட்டம் தொடங்கிய நிலையில் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் பொலிவியா வீரர் புருனோ மிரண்டா கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக பனமா வீரர் குயெர்ரேரோ 79-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மேலும், 91-வது நிமிடத்தில் செசர் யானிஸ் கோல் அடிக்க பனமா 3-1 என வெற்றி பெற்றது.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உருகுவே- அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் 2-வது பாதி நேர ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் மத்தியாஸ் ஆலிவெரா கோல் அடிக்க உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின் அமெரிக்கா கோல் அடிக்க முயற்சித்தது. அதற்கு பலன் கிடைக்கவில்லை. உருகுவே அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் உருகுவே 1-0 என வெற்றி பெற்றது.

    "சி" பிரிவில் உருகுவே 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. பனமா இரண்டு வெறறி, ஒரு தோல்வி மூலம் 6 புள்ளிகள் பெற்றி 2-வது அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

    அமெரிக்கா (ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 3 புள்ளிகள்), பொலிவியா (3 போட்டிகளிலும் தோல்வி) காலிறுதி வாய்ப்பை இழந்தன.

    சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. #Neymar #Brazil #Uruguay
    லண்டன்:

    5 முறை உலக சாம்பியன் பிரேசில்-உருகுவே அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் பிரேசில் அணியினர் வசம் இருந்தாலும் எளிதில் கோல் அடிக்க முடியவில்லை.

    76-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்தார். உருகுவே பின்கள வீரர் டியாகோ லாக்சல்ட் முரட்டு ஆட்டத்தால் பிரேசில் வீரர் டானிலோவை தடுத்ததற்காக வழங்கப்பட்ட இந்த பெனால்டி வாய்ப்புக்கு உருகுவே வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புக்கு நடுவர் பணியவில்லை.

    உருகுவே அணி வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி ஆகியோர் கோலை நோக்கி அடித்த அபாரமான ஷாட்களை பிரேசில் அணியின் கோல்கீப்பர் அலிசன் லாவகமாக தடுத்து நிறுத்தினார். முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
    இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. இதன் முதல் கால் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியும் பிரான்ஸ் அணியும் மோதுகின்றனர். #FIFA2018 #Uruguay #France
    நோவாகிராட்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி விட்டது.

    இதன் கால்இறுதிக்கு போட்டியை நடத்தும் ரஷியா, முன்னாள் சாம்பியன்களான பிரேசில், உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சுவீடன், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

    இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை (6-ந்தேதி) தொடங்குகிறது. நோவா கிராட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் உருகுவே-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரண்டு முறை உலக கோப்பையை வென்ற (1930, 1950) உருகுவே அணி இந்தப் போட்டித் தொடரில் தோல்வி எதையும் தழுவவில்லை. லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் எகிப்தையும், 1-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவையும், 3-0 என்ற கணக்கில் ரஷியாவையும் தோற்கடித்து இருந்தது. 2-வது சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி இருந்தது.

    உருகுவே அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களாக கவானி, சுராஸ் உள்ளனர். கவானி 2-வது சுற்றில் 2 கோல் அடித்தார். இந்தப் போட்டித் தொடரில் அவர் 3 கோல்கள் அடித்து உள்ளார். உடல் தகுதி அவருக்கு பிரச்சினையாக இருக்கிறது.

    2-வது சுற்றில் கவானி காயத்தால் பாதியில் விலகினார். நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் ஆடுவதில் சிக்கல் இருக்காது என்றே கருதப்படுகிறது. இதே போல சுராஸ் பந்தை கடத்தி செல்வதில் வல்லவர். மேலும் பின்களத்தில் அந்த அணி வீரர்கள் மிகுந்த பலத்துடன் உள்ளனர்.

    பலம் வாய்ந்த பிரான்சை வீழ்த்தி 6-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் உருகுவே உள்ளது. கடந்த உலக கோப்பையில் அந்த அணி 2-வது சுற்றில் கொலம்பியாவிடம் தோற்று இருந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதியில் நுழையும் வேட்கையில் உள்ளது.

    உலக கோப்பையில் பிரான்சிடம் இதுவரை உருகுவே தோற்காததால் நம்பிக்கையுடன் உள்ளது. 3 முறை மோதி இருக்கிறது. இதில் 1 தடவை வென்றது. 2 ஆட்டம் டிரா ஆனது. 1966-ல் லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. 2002 மற்றும் 2010 உலக கோப்பையில் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    உருகுவேவை போலவே பிரான்ஸ் அணி தோல்வி அடையவில்லை. லீக் ஆட்டங்களில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், 1-0 என்ற கணக்கில் பெருவையும் வீழ்த்தி இருந்தது. டென்மார்க்குடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.

    அந்த அணியில் எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, கிரவுட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 1998-ம் ஆண்டு சாம்பியான பிரான்ஸ் அணி 6-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. கடந்த முறை அந்த அணி கால் இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அரை ஈறுதி வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. இதில் பிரான்ஸ் 1 தடவைதான் வெற்றி பெற்றுள்ளது. உருகுவேயிடம் 3 முறை தோற்றுள்ளது. 4 ஆட்டம் டிரா ஆனது.

    பிரான்சும், உருகுவேயும் சம பலத்துடன் திகழ்வுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #FIFA2018 #Uruguay #France
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

    இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.  



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் போர்ட்டுகல் வீரர் பெப்பே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.



    அதன்பின் 62-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இது இந்த ஆட்டத்தில் அவர் அடித்த இரண்டாவது கோலாகும். இதனால் உருகுவே அணி மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.



    அதைத்தொடர்ந்து இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ் அணி, அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்றுவரும் இரண்டாவது நாக்-அவுட் போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

    இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.  #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ், உருகுவே-போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. #FIFA2018 #WorldCupfootball2018
    கசான்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கி யது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. ‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறைமோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்’, பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஜப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சவுதிஅரேபியா, எகிப்து (‘ஏ’ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி), பெரு, ஆஸ்திரேலியா (சி), நைஜீரியா, ஐஸ்லாந்து(டி), செர்பியா, கோஸ் டாரிகா (இ), தென் கொரியா, ஜெர்மனி (எப்), துனிசியா, பனாமா (ஜி), செனகல், போலந்து (எச்), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று ஓய்வு நாளாகும் 2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ்- ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அர்ஜன்டீனா அணிகள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    இரண்டு அணிகளும் முன்னாள் சாம்பியன் ஆகும். அர்ஜென்டீனா 1978, 1986-ம் ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998-ம் ஆண்டி லும் உலககோப்பையை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெளியேற்றப்பட்டுவிடும்.

    நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே -‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

    3-ந்தேதி வரை, 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் 6 மற்றும் 7-ந்தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ந்தேதிகளிலும், 3-வது இடத்திற்கான போட்டி 14-ந்தேதியயும் நடைபெறுகிறது. இறுதி போட்டி 15-ந்தேதி நடக்கிறது. #FIFA2018 #WorldCupfootball2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது உருகுவே அணி. #WorldCup2018 #URURUS
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் ரஷியா அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்தே உருகுவே அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் சுவாரஸ் ஒரு கோல் அடித்தார்.

    அவரை தொடர்ந்து ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் உருகுவே அணி வீரர் டெனி ஷெரிஷேவ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் உருகுவே அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ரஷியா அணி வீரர்கள் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 90-வது நிமிடத்தில் உருகுவே அணியின் எடின்சன் கவானி ஒரு கோல் அடிக்க 3-0 என முன்னிலை பெற்றது.

    கூடுதலாக கிடைத்த 5 நிமிடங்களிலும் ரஷியா அணி கோல் அடிக்கவில்லை. இறுதியில், ரஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    ×