என் மலர்
நீங்கள் தேடியது "US embassy"
- பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியுடன் தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியுடன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கர்கள் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
- அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.
- வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் விழிப்புடன் செயல்படவும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நகரம் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலம் முழுவதும் அங்கு அத்தியாவசியமற்ற மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தின் அமைதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகர துணை கமிஷனர் இர்பான் நவாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.
- இரு நாடுகளும், தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை வெளியிட்டுள்ளன
- இரு நாடுகளின் அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளும், ரஷியாவில் வாழும் தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
அடுத்த 48 மணி நேரத்தில் ரஷியாவில் பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம்.
பலர் ஒன்று கூடும் இடங்கள், இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தாக்குதல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, ரஷியாவில் வாழும் அமெரிக்க குடிமக்கள், பொதுவெளியில் நடமாடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதே போன்று இங்கிலாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உக்ரைன் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, 2 வருடங்கள் ஆன நிலையில், ரஷியாவில் ஆபத்து அதிகரித்துள்ளது.
ரஷியாவில் மக்களுக்கு பாதுகாப்பு உறுதியாக இல்லை.
எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷியாவிற்கு செல்லும் இங்கிலாந்து நாட்டினருக்கு பயண காப்பீடு ரத்து செய்யப்படும்.
இவ்வாறு இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இரு நாடுகளின் இந்த அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அமெரிக்காவும், இங்கிலாந்தும், தங்கள் எச்சரிக்கைக்கான காரணங்களை இதுவரை வெளியிடவில்லை.
- அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.
- பாலஸ்தீனம் மெது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் நகரமான டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமனைச் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இன்று [ஜூலை 19] அதிகாலை 3.15 மணியளவில் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பென் யகுதா மற்றும் ஸலோம் அலெய்கெம் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான கட்டடம் அமெரிக்க தூதரக கட்டடத்துக்கு வெகு அருகாமையில் உள்ளது.

இதற்கிடையில் காசா நகரில் இயங்கி வரும் அமெரிக்க பள்ளி மீதும், 2 அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ஒரு ராக்கெட் வந்து விழுந்தது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் அது விழுந்தது.
இந்த ராக்கெட் வீச்சில் யாரும் பாதிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும், கிழக்கு பாக்தாத்தில் இருந்து ராக்கெட் வீசப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. அந்த பகுதியில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடா பகுதியில், போர்க்கப்பல்களையும், விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், இந்த ராக்கெட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.



விசாரணையில் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது மண்ணடியைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறியுள்ளார். #bombthreat #USEmbassy