என் மலர்
நீங்கள் தேடியது "uticorin"
- பெரியசாமிநகர் பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
- லாரி டிரைவரான இவர் நேற்று கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீளவிட்டான்-துறைமுகம் ரெயில் நிலையங்கள் இடையே பெரியசாமிநகர் பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி இருப்புபாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் இறந்துகிடந்தது தூத்துக்குடி பெரியசாமிநகரை சேர்ந்த முருகன் (வயது31) என்பது தெரியவந்தது. லாரி டிரைவரான இவர் நேற்று கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.
அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகன் மீது கடந்த 9 ஆண்டுகளுக்கு அவரது மனைவி சத்யாவை கொலை செய்ததாக வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.