என் மலர்
நீங்கள் தேடியது "Uttar Pradesh Samiyar"
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக சாமியார் பரமகன்சா ஆச்சாரியா அறிவித்தார்.
- சாமியார் பரமகன்சா ஆச்சாரியாவின் கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தினார்கள்.
தூத்துக்குடி:
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து பேசினார். இந்நிலையில், உத்தரபிரதேச சாமியார் பரமகன்சா ஆச்சாரியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தலைமையில் பழைய பஸ் நிலையம் அருகில் சாமியார் பரமகன்சா ஆச்சாரியா வின் கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தினார்கள்.
இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன் குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வட்ட செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், சதீஷ்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.