search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttar Pradesh woman murdered"

    • சிறுவன் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்தான்.
    • செல்போனில் கேம் விளையாடுவதை தாயார் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டான்.

    லக்னோ:

    சிறுவர்கள் செல்போனில் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்படி செல்போனில் 'கேம்' விளையாடுவதை தடுத்த தாயை சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகன், 9 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். அவரது கணவர் ராணுவ அதிகாரி. மேற்கு வங்காளத்தில் பணியாற்றி வருகிறார்.

    சிறுவன் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்தான். இதை அவனது தாயார் கண்டித்து செல்போனில் கேம் விளையாடுவதை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டான்.

    தந்தை உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் குறி வைத்து சுட்டான். இதில் பலத்த காயம் அடைந்த தாய் அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து தாயின் பிணத்தை வீட்டில் மறைத்து வைத்தான். சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க ஏர்பிரெஷ்னரை பயன்படுத்தி இருக்கிறான். 3 நாட்கள் பிணத்துடன் மகன் இருந்தான்.

    வீட்டில் உள்ள 9 வயது சகோதரியிடம் கொலை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினான்.

    தந்தை வீட்டுக்கு வந்த போது எலெக்ட்ரீசியன் தாயை சுட்டுக் கொன்றதாக கூறி மகன் நாடகமானடினான்.

    போலீஸ் விசாரணையில் அவன் தாயை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டான். இதைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

    பெற்ற தாயை மகனே சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×