search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uvari"

    • உவரியில் மண்எண்ணை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.
    • தீயணைப்பு துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    தூத்துக்குடியில் இருந்து மீன்வளத்துறை மூலம் மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணையை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை டேங்கர் லாரி ஒன்று உவரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    உவரி-குமரி பைபாஸ் ரோட்டில் காரிகோவில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மண்எண்ணை சாலையில் ெகாட்டியது.

    இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு துறையினர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில் அங்கு விரைந்து வந்து சாலையில் கொட்டிக்கிடந்த மண்எண்ணையில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    தொடர்ந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

    • ராதாபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உவரியில் நடந்தது.
    • உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் வழங்கினார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உவரியில் நடந்தது. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனி வாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல ராஜா, திசையன் விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உவரி மற்றும் கடலோர பகுதிகளில் மண்எண்ணை அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.
    • உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    திசையன்விளை:

    உவரி மற்றும் கடலோர பகுதிகளில் மண்எண்ணை அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவில் உவரி அருகே உள்ள ஆனைகுடி விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் தாமோதரன் (வயது 32) என்பது தெரியவந்தது.

    ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் ஓட்டிவந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 கேன்களில் 275 லிட்டர் மண்எண்ணையை பதுக்கி வைத்து கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து காருடன் மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தாமோதரனையும் கைது செய்தனர்.

    • கிருஷ்ணகுமாருக்கும் , அதே ஊரை சேர்ந்த ஈசாக் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவத்தன்று ஈசாக் மகன்கள் தாமஸ், தினேஷ் ஆகியோர் கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கம்பியால் தாக்கினர்.

    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 25). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஈசாக் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ஈசாக் மகன்கள் தாமஸ் (25), தினேஷ் (23) ஆகியோர் கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கம்பியால் தலையில் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக உவரி போலீசில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து அண்ணன் ,தம்பியை வலைவீசி தேடி வருகிறார்.

    • சுபாசுக்கும் மீனவர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தில் ராஜா தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே கூட்டப்பனை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமாடன். இவருடைய மகன் சுபாஷ் என்ற மணி (வயது 26). தொழிலாளி.

    கொலை

    இவர் உவரியை சேர்ந்த ரசிகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுபாசுக்கும் கூட்டப்பனையை சேர்ந்த மீனவர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் சுபாசை கொலை செய்ய ராஜா திட்டம் தீட்டியுள்ளார்.

    அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சுபாசுடன் நட்பு பாராட்டி அவரை ராஜா வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபாசிற்கு மதுவிருந்து கொடுத்து அவர் மதுபோதையில் இருந்தபோது ராஜா, அவரது 2-வது மனைவி ஜோஸ்பின் சூசை வெஸ்பினா, ராஜாவின் சகோதரர்கள் தீபன் சிங், பிரவின் ஆகிய 4 பேரும் சேர்ந்து சுபாசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசிவிட்டு சென்று விட்டனர்.

    கைது

    இந்த சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜாவும், அவரது 2-வது மனைவியும் திருப்பூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, ஏட்டுகள் ரத்தின வேல், ரெனால்டு ஆகியோர் மாறுவேடத்தில் சென்று துப்புதுலக்கி அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ராஜாவையும் அவரது 2-வது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தீபன் சிங், பிரவின் ஆகியோர் ஏற்கனவே போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

    • திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த மேல உவரியை சேர்ந்தவர் குமார்.
    • திசையன்விளை அருகே ஆனைகுடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற உவரியை சேர்ந்த ரீகன் (45), ரெனோ (48) ஆகியோர் மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்க ள் மீது மோதி உள்ளது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த மேல உவரியை சேர்ந்தவர் குமார் (வயது 34).

    திசையன்விளையில் இருந்து உவரிக்கு

    உவரி அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (40). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து உவரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டி சென்றார். திசையன்விளை அருகே ஆனைகுடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற உவரியை சேர்ந்த ரீகன் (45), ரெனோ (48) ஆகியோர் மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்து வலதுபுறமாக திரும்பும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்க ள் மீது மோதி உள்ளது.

    இதனால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். குமாரின் உடல் பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்க ப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த குமாருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குமார் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தார். சமீபத்தில் குமாரின் தந்தைக்கு சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நேற்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

    • 108 சிவதாண்டவ கலை வேலைப்பாடுகளுடன் நிலைக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் முன்பு 108 அடி உயரத்தில் 9 நிலை முழுவதும் கருங்கற்களால் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    நேற்று ராஜகோபுரவாசல் கல்நிலை விடும் விழா நடந்தது. 22 அரை அடி உயரம் 12 அரை அடி அகலத்தில் 108 சிவதாண்ட வகலை வேலைப்பாடு களுடன் நிலைக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலைவாசல் விடும் விழாவை முன்னிட்டு சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது.

    தொடர்ந்து கோபூஜை நிலை கல்லுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வஸ்திரங்கள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு கிரைன் மூலம் நிலைவிடப்பட்டது.

    விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், கவுரவ தலைவர் லங்கால்லிங்கம், செயலாளர் வெள்ளையா நாடார், பொருளாளர் சுடலை மூர்த்தி, துணைத்தலைவர் கனகலிங்கம், ராஜகோபுர கமிட்டி உறுப்பினர்கள் ராஜாமணி நாடார், சுந்தர், மணி, பாலகிருஷ்ணன், தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், வணிகர் சங்க பேரமைப்பு மாநில இணைச்செயலாளர் தங்கையா கணேசன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், ராஜகோபுர ஸ்தபதி சந்தானகிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

    • உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் கேரளாவிற்கு கடத்த முயல்வதாக 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    • தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கடத்த முயல்வதாக கூறி 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

    தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் உவரியில் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    ரேஷன் அரிசி பறிமுதல்

    இதையடுத்து லாரியில் இருந்த 37 மூட்டை ரேஷன் அரிசியை லாரியுடன் போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த களியக்காவிளை பாடசாலையை சேர்ந்த சரத் (வயது 29), அருண்(36), அரிபிரசாத் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    • உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
    • அதைத்தொடர்ந்து சுவாமிகள் தெப்பத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    திசையன்விளை:

    உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.

    9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் ஊர்வலம் ரதவீதிகளில் நடந்தது. நேற்று இரவு தெப்ப திருவிழா நடந்தது.

    விழாவை முன்னிட்டு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தெப்பத்திற்கு புறப்பட்டனர்.

    அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அலங்கார சப்பரத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சுவாமிகள் தெப்பத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

    • அமலோற்பவம் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார்.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அமலோற்பவத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி அமலோற்பவம்(வயது 67).

    இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அவர் ஆலயம் முன்பு நின்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அமலோற்பவத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர்.

    இதனை அறிந்த அவர் உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  

    • இன்று காலை உவரியில் இருந்து வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.
    • வெள்ளை மண்எண்ணை முறைகேடாக கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் உவரி சோதனைச்சாவடி வழியாக முறைகேடாக மண்எண்ணை மற்றும் குட்கா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் உவரி கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    ராதாபுரம் மீன்வளத்துறை இயக்குனர் மோகன்குமார் தலைமையிலான போலீசார் இன்று காலை 5.30 மணியளவில் உவரியில் இருந்து வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    அதில் மீனவர்களின் விசைபடகுகளுக்கு தமிழக மீன்வளத்துறை சார்பில் மானியமாக வழங்கும் வெள்ளை மண்எண்ணை சுமார் 400 லிட்டர் திருச்செந்தூருக்கு முறைகேடாக கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து உவரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக ஆட்டோவை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த வள்ளிராஜா (வயது 42) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • முத்துகிருஷ்ணன் ,ராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    திசையன்விளை:

    உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உவரியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்த உடன்குடி தேரியூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 19), அதே ஊரை சேர்ந்த ராமன் (வயது 33) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக தேரியூரை சேர்ந்த குருசாமி (வயது 21), உவரி ராஜா தெருவை சேர்ந்த ஜெயந்தன் (வயது 40) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் இவர்கள் கஞ்சா மொத்த வியாபாரிகள் என தெரியவந்தது.

    ×