என் மலர்
நீங்கள் தேடியது "Vairamuthu"
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்தார்.
- சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்கள் புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.
சென்னை:
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பத்திரமாக பூமி திரும்பி சுனிதா வில்லியம்ஸ்-க்கு கவி பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில்,
சுனிதா வில்லியம்ஸின்
பூமி திரும்பல்
ஒரு பெண்ணின் வெற்றியோ
நாட்டின் வெற்றியோ அல்ல;
மகத்தான மானுடத்தின் வெற்றி
அவர்
மண்ணில் இறங்கும்வரை
இரண்டு மடங்கு துடித்தது
பூமியின் இருதயம்
பெண்ணினத்துக்குக்
கூடுதல் பெருமை சேர்த்துவிட்டார்
அந்த வேங்கை மகள்
அவரது உயரம்
நம்பிக்கையின் உயரம்
அவரது எடை
துணிச்சலின் நிறை
மரணத்தின்
உள்கூடுவரை சென்றுவிட்டு
வாழ்வுக்குத் திரும்பியிருக்கிற
சுனிதா வில்லியம்ஸை
பூமியின் ஒவ்வொரு பொருளும்
வரவேற்கின்றது
இந்த விண்வெளிப் பிழை
எதிர்கால அறிவியலைத்
திருத்திக்கொள்ளும்
ஆதாரமாக விளங்கும்
பிழை என்பது அறியாமை;
திருத்திக்கொள்வது அறிவு
என்ற பாடத்தை
அறைந்து சொல்லும்
சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்
வந்தவரை வாழ்த்துவோம்
மானுடத்தை வணங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
- பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.
சென்னை எம்ஆர்சி நகரில் வைரமுத்தியம் என்ற பெயரிலான கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கிய பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
அங்கு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கத்தில் கட்டுரை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை எம்பி ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொன்மாலை பொழுதில் தன் திரையிசை வாழ்வை தொடங்கிய வைரமுத்துவுக்கு இது உண்மையிலேயே பொன்னான நாள்.
இப்படி ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
தமிழின் புகழை உலகெல்லாம் கொண்டு சேர்த்த வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.
உலக கவியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார் வைரமுத்து என்றே எண்ணத் தோன்றுகிறது.
கலைஞரின் இலக்கிய மகன் வைரமுத்து. வைரமுத்துவின் 17 படைப்புகளை கலைஞர் வெளியிட்டிருக்கிறார். வைரமுத்துவுக்கு கவிப்பேரரசர் என பெயரிட்டு அழைத்தவர் கலைஞர்.
இலக்கியத்தின் எல்லா பக்கங்களிலும் நுழைந்து வெற்றியை சாதித்து காட்டியவர் வைரமுத்து.
நமது ஜெகத்ரட்சகன் எம்பி வஞ்சனையில்லாமல் அனைவரையும் பாராட்டக் கூடியவர்.
இவ்வாறு கூறினார்.
- இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
- வைரமுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க்கிற்கு கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.
ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவில் "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே, இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம் தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக வாங்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இயக்குனர் கவுதமன் 'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.

இயக்குனர் கவுதமன்
இந்நிலையில், இந்த படத்திற்காக பாடலமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கவுதமன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

படக்குழு
அந்த பதிவில், "ஜி.வி.பிரகாஷ் வீடு கெளதமன் படத்துக்குப் பாட்டுக் கட்டுகிறோம். மகிழ்ச்சியின் இழைகளில் நெய்யப்படுகிறது பாட்டு வஞ்சிக்கொடியே வாடி - நீ வளத்த பொருளத் தாடி பாசத்த உள்ளவச்சுப் பாசாங்க வெளியவச்சு வேசங்கட்டி வந்தவளே வெறும்வாய மெல்லுறியே பத்தே நிமிடத்தில் பாட்டு பிரமாதம் பிரகாஷ்! " என்று பதிவிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் வீடு
— வைரமுத்து (@Vairamuthu) November 3, 2022
கெளதமன் படத்துக்குப்
பாட்டுக் கட்டுகிறோம்
மகிழ்ச்சியின் இழைகளில்
நெய்யப்படுகிறது பாட்டு
"வஞ்சிக்கொடியே வாடி - நீ
வளத்த பொருளத் தாடி
பாசத்த உள்ளவச்சுப்
பாசாங்க வெளியவச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறும்வாய மெல்லுறியே"
பத்தே நிமிடத்தில்பாட்டு
பிரமாதம் பிரகாஷ்! pic.twitter.com/LfEU1OX4h1
- சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
- தற்போது வைரமுத்துவை சந்தித்த பிரபல நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அர்ச்சனா
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த தொலைக்காட்சி நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்த பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்பொழுது வைரமுத்து ஆசிர்வாதம் அளிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

வைரமுத்துவை சந்தித்த அர்ச்சனா
இந்நிலையில் நடிகை அர்ச்சனாவின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
- மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- கவிஞர் வைரமுத்துவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும் தமிழ் மொழியைக்காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர்.

வைரமுத்து
இந்தநிலையில் அவர்களின் நினைவு போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்.
கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான். தேகங்கள் அணைந்துவிட்டன தீ அப்படியே. செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
மொழிப்போர் வீரர்களை
— வைரமுத்து (@Vairamuthu) January 25, 2023
நெற்றி நிலம்பட
வணங்குகிறோம்
கண்ணகி
மதுரையில் இட்ட
நெருப்புக்குப் பிறகு
தமிழ்நாட்டைச் சுட்டது
தமிழுக்காக
எங்கள் மறவர்கள்
தேகத்தில்
மூட்டிக்கொண்ட தீ தான்
தேகங்கள்
அணைந்துவிட்டன
தீ அப்படியே
செந்தீயைத் தீண்டாதே
தள்ளிநில் இந்தியே#தமிழ் | #தமிழ்நாடு
- துருக்கியில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும் கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
துருக்கியின் கீழே
— வைரமுத்து (@Vairamuthu) February 7, 2023
பூமி புரண்டு படுத்துவிட்டது
ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்#TurkeyEarthquake pic.twitter.com/yJGWZWJjqj
- இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
- உலம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

வைரமுத்து
இன்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் காதலர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார். அதில், எந்த நிலையிலும் வரலாம் எந்த வயதிலும் வரலாம் அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம். ஆனால், என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற உடலின் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம்தான் காதல். அந்த முதல் அனுபவம் வாழ்க என்று பதிவிட்டுள்ளார்.
எந்த நிலையிலும் வரலாம்
— வைரமுத்து (@Vairamuthu) February 14, 2023
எந்த வயதிலும் வரலாம்
அது ஒன்றல்ல
ஒன்றிரண்டு மூன்று
நான்கென்று
எண்ணிக்கை ஏறலாம்
ஆனால்,
என்னதான் அது என்ற
இருதயத் துடிப்புக்கும்,
எப்போதுதான் நேரும் என்ற
உடலின் தவிப்புக்கும்
இடைவெளியில் நேருகின்ற
துன்பம் குழைத்த
இன்பம்தான் காதல்
அந்த
முதல் அனுபவம் வாழ்க
- ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
- மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பழனியம்மாள் நாச்சியார்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன். மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே. ஒரு முதலமைச்சரைப் பெற்றுக்கொடுத்தோம் என்ற பெருமாட்டியின் பெருமை மறைவதில்லை. என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே. எல்லாத் துன்பங்களிலிருந்தும் காலம் உங்களை மீட்டெடுப்பதாகுக" என்று பதிவிட்டுள்ளார்.
உங்களைப் போலவே
— வைரமுத்து (@Vairamuthu) February 25, 2023
நானும் கலங்குகிறேன்
மூத்து முதிர்ந்து
உதிர்ந்தாலும்
தாய் தாய்தானே
ஒரு முதலமைச்சரைப்
பெற்றுக்கொடுத்தோம் என்ற
பெருமாட்டியின் பெருமை
மறைவதில்லை
என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே
எல்லாத்
துன்பங்களிலிருந்தும்
காலம் உங்களை
மீட்டெடுப்பதாகுக
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வைரமுத்து - மு.க.ஸ்டாலின்
அதில், "தமிழ்நாட்டு முதலமைச்சரின் 70-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அவரை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். நீண்டகாலம் வாழவேண்டும்; வாழும்வரை ஆளவேண்டும் என்று வாழ்த்தினேன். பொன்னாடை பூட்டி நான் எழுதிய புத்தகம் கொடுத்தேன் தலைப்பைப் பார்த்ததும் சில்லென்று சிரித்தார், சிகரங்களை நோக்கி". என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு முதலமைச்சரின்
— வைரமுத்து (@Vairamuthu) March 1, 2023
70ஆம் பிறந்தநாளை முன்னிட்டு
அவரை முகாம் அலுவலகத்தில்
சந்தித்தேன்
நீண்டகாலம் வாழவேண்டும்;
வாழும்வரை ஆளவேண்டும்
என்று வாழ்த்தினேன்
பொன்னாடை பூட்டி
நான் எழுதிய
புத்தகம் கொடுத்தேன்
தலைப்பைப் பார்த்ததும்
சில்லென்று சிரித்தார்
"சிகரங்களை நோக்கி" pic.twitter.com/uhnlRfOuZZ
- உலம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

வைரமுத்து
இன்று உலகம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் மகளிர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார். அதில், மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள் வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள் ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும். உலக மகளிர் திருநாள் வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார்.
மாலையும் நகையும்
— வைரமுத்து (@Vairamuthu) March 8, 2023
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்
கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்
உலக
மகளிர் திருநாள் வாழ்த்து#மகளிர்தினம் | #WomensDay
- தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகதிருவிழா நடைபெற்று வருகிறது.
- இதில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகதிருவிழா நடைபெற்று வருகிறது. மகளிர் தினவிழாவை முன்னிட்டு நேற்று கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "நான் முதன்முதலில் வாசித்த புத்தகம், ஏழைபடும் பாடு என்ற பிரெஞ்ச் மொழி பெயர்ப்பு நாவலாகும். தேனி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் லாந்தர் வெளிச்சத்தில் இரவில் படிக்க தொடங்கிய நான் அதிகாலை சேவல் கூவும் நேரத்தில் வாசித்து முடித்தேன். அன்று என் நெஞ்சில் ஏற்பட்ட புத்தக வாசிப்பு என்ற நெருப்பு எனது 70 வயதிலும் எரிமலையாக எழுந்து நிற்கிறது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழை வாசிக்கவும், எழுதவும், பேசவும், படிக்கவும், பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல புத்தகங்களை சேர்த்து வையுங்கள். தாயின் வழியாகத்தான் குழந்தைகள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா உலக அளவில் புத்தக அச்சடிப்பில் 5-ம் இடத்தில் உள்ளது.
வேட்டை யுகம், வேளாண்மை யுகம், தொழில் யுகம் ஆகியவற்றை கடந்து தற்போது கல்வி யுகத்தில் இருந்து வருகிறோம். இந்த யுகத்தில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே தப்பி பிழைக்க முடியும். பற்றவன், கல்லாதவன் என்ற நிலையானது தற்போது தொழில்நுட்பம் கற்றவன், தொழில்நுட்பம் கல்லாதவன் என்று மாறியுள்ளது. வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டுமே வாழ முடியும். தொழில் நுட்பத்தை மகனிடம் இருந்தும், பேரன் பேத்திகளிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போதைய கல்வியுகத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் என அனைவரும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். எழுத்தாளர்களை எந்த குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்வதில்லை. எழுத்தாளராக இருக்கும் ஆண், பெண் அனைவருமே பாவம். பல தடைகளை தாண்டிதான் இவர்கள் எழுத வேண்டியுள்ளது. எழுத்தாளர்கள் எந்த காலத்திலும் கொண்டாடப்பட்டது கிடையாது.
பாரதியார், புதுமைப்பித்தன் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு மரியாதை இல்லை. எந்த தேசத்தில் கற்றவர்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கு மட்டுமே அறிவுள்ள ஆட்சி நடக்கிறது என்று பொருள். எனவே எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு மரியாதை செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.