என் மலர்
நீங்கள் தேடியது "vaithilingam mp"
- புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுற வாய்க்கால் கட்டைகள் மேம்படுத்தும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நகராட்சி மூலம் நடைபெற உள்ளது.
- இதற்கான பணியை கந்தப்பா முதலியார் வீதி காந்திவீதி சந்திப்பில் வைத்திலிங்கம் எம்.பி. நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை சின்னக்கடை வார்டு கந்தப்பா முதலியார் வீதியில் மகாத்மா காந்தி வீதி முதல் பாரதி வீதி வரை பழுதடைந்த பழைய சிமெண்டு சாலையினை மாற்றி புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுற வாய்க்கால் கட்டைகள் மேம்படுத்தும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நகராட்சி மூலம் நடைபெற உள்ளது.
இதற்கான பணியை கந்தப்பா முதலியார் வீதி காந்திவீதி சந்திப்பில் வைத்திலிங்கம் எம்.பி. நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மாணவர் சிறப்பு பஸ் இயக்க கோரி வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் சாரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கான இலவச ஒரு ரூபாய் பஸ்சை இயக்க வேண்டும். பள்ளி சீருடை, மதிய உணவில் முட்டை, இலவச நோட்டு, புத்தகம், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- புதுவையில் மோசமான செல்போன் இணைப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வேறு எந்த தனியார் நிறுவன த்திற்கும் செல்லாமல் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.
- எனவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புதுவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி வசதியை உடனடியாக வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பேசியதாவது:-
புதுவையில் மோசமான செல்போன் இணைப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வேறு எந்த தனியார் நிறுவன த்திற்கும் செல்லாமல் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாகவே இருந்து வருகின்றனர். தேசிய நிறுவனத்தின் மீதான பக்தியால் அதன் சந்தாதாரர்களாகவே இருந்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3 ஜி சேவையே வழங்கி வருவதால் தொலைபேசி இணைப்புகளில் தொந்தரவு மற்றும் இண்டர்நெட் இணைப்பு மிக மெதுவாக உள்ளது.
எனவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புதுவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி வசதியை உடனடியாக வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை யூனியன் பிரதேசத்தை ஒரு மாதிரி பகுதியாக கொண்டு இந்த இரண்டு சேவைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
- ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? வேண்டாமா? என முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசு ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? எனவும் தெரிவிக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் கவர்னர் மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால் முதலமைச்சர் அதிகாரம் தேவை என கூறுகிறார்.
உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி உள்ளாரா? இல்லை கவர்னரையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா? அண்ணன் தங்கையாக இருந்தாலே பாக பிரிவினை, பங்கு பிரிவினை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதலமைச்சர் நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும்.
சுயேச்சை எம்.எல்.ஏ. வை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை தூண்டுவது போன்ற நிலைப்பாடை கைவிட வேண்டும். நேரடியாக முதலமைச்சரே களம் இறங்க வேண்டும். அப்படி முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் பாராளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.
வீதிக்கு வீதி திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு தனி வசதி என விளம்பரப்படுத்துகின்றனர். இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது. இது மிகப்பெரும் கலாச்சார சீரழிவு. குடும்பங்களை அழிக்கும் முயற்சி.
எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறதா? இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா? அமித்ஷா அறிவித்த எக்சலண்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
- மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார்.
- நான் அதை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும் என சொல்கிறேன். ஆனால் அவர்கள் தரவில்லை என அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். அதிகாரிகள் என்ன செய்வார்கள்?
புதுச்சேரி:
மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியலிங்கம் எம்.பி. , எம்.எல்.எ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி,ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஒன்றும் செய்ய முடியவில்லை. நீதிபதியிடம் கேட்கிறார். யாரிடம் கேட்க வேண்டுமோ? அவரிடம் கேட்கவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவில்லை. தப்பான இடத்தில் கதவை தட்டுகிறார். அப்படியென்றால் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களை ஏமாற்றுகிறார் என அர்த்தம்.
நான் அதை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும் என சொல்கிறேன். ஆனால் அவர்கள் தரவில்லை என அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். அதிகாரிகள் என்ன செய்வார்கள்? கவர்னர், மத்திய அரசை காரணம் சொல்ல மறுக்கிறார். அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகிறார்.
அவர் முதல்-அமைச்சர் தானே? அவரின் அதிகாரம் எங்கே போனது? வாக்காளர்களாகிய மக்கள் ஏமாந்துவிட்டனர். மோடிக்கு புதுவையே தெரியாது. புதுவையில் பாஜக கிடையாது. அதை இறக்குமதி செய்தது ரங்கசாமி. ரங்கசாமி இல்லாவிட்டால் புதுவையில் பா.ஜனதா இல்லை.
ஆண்கள் மது குடித்து அழிந்துவிட்டனர், விதவைகளாக பெண்கள்தான் உள்ளனர். அவர்களையும் அழிக்க பிராந்தி கடையில் பெண்களுக்கு இலவச மது வழங்குகின்றனர். இப்படி கடைகளை திறப்பது நியாயமா? என முதல்-அமைச்சரிடம் கேட்டால், எனக்காக செய்யவில்லை, மக்களுக்காக செய்கிறேன் என்கிறார்.
ரூ.ஆயிரம் கொடுக்க என்னிடம் காசு இல்லை. மற்ற திட்டங்களுக்கு காசு இல்லை. இதிலிருந்துதான் பணம் தருகிறேன் என்கிறார். குடும்பத்தை அழித்துவிட்டு ரூ.ஆயிரம் வழங்குவதில் என்ன பயன் உள்ளது? ரங்கசாமி நிஜமான சாமியார்தானா? நிஜமான சாமியாராக இருந்தால் குடும்பத்தை பற்றி, சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து நன்மையானவற்றை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கந்தப்ப முதலியார் வீதியில் நகராட்சி மூலம் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது.
- ஆய்வின் போது புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் இடங்களில் மழைநீர் தேங்காத வாய்க்கால் அமைத்து கொடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கந்தப்ப முதலியார் வீதியில் நகராட்சி மூலம் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது.
இப்பணிகளை வைத்திலிங்கம் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் இடங்களில் மழைநீர் தேங்காத வாய்க்கால் அமைத்து கொடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
பணிகளை விரை வாகவும் தரமாகவும் செய்து கொடுக்கும்படி அதிகாரி களை வலியுறுத்தினர்.
ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், பொதுப் பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் வல்லவன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், நகராட்சி இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள், மனித நேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த கைலாஷ், சாமிநாதன், சீதாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஒரு நாள் பயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
- இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற 4-வது பிட் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஒரு நாள் பயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏனாமில் சில பணிகளுக்கு நிதி ஒதுக்கி கொடுத்திருந்தார். அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெறப்பட்ட நிதியை சரியாக செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், திட்ட ங்களுக்கு தேவைப்படும் நிதியை தர தயாராக இருப்ப தாகவும் உறுதியளித்தார்.
இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற 4-வது பிட் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். பின்னர் ஏனாமில் கட்டப்பட்டுவரும் 100 படுக்கைகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை கிளை யையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- புதுவை ரெயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது.
- ஏனாமிற்கு ரெயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரெயிலை புதுவைக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.
புதுச்சேரி:
புதுவை ரெயில் நிலையத்தில் வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது புதுவை ரெயில் நிலையத்திற்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், வளர்ச்சிப்பணிகள், புதுவை ரெயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் காரணமாக தற்போது புதுவையில் இருந்து மங்களூர், தாதர், டெல்லி, ஹவுரா, புவனேஸ்வர், யஷ்வந்த்பூர், கன்னியாகுமாரி ஆகிய ஊர்களுக்கு ரெயில் சேவை உள்ளது.
இதனால் புதுவைக்கு பயணிகள் வருகை ஆண்டுதோறும் 4.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் தரம் உயர்த்தவும், மேலும் பல முக்கிய ஊர்களுக்கு புதுவையில் இருந்து ரெயில் வசதி ஏற் படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
ஏனாமிற்கு ரெயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரெயிலை புதுவைக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். புதுவை ரெயில் நிலையத்தில் ெரயில்களை பராமரிக்க கூடுதல் லைன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. புதுவையில் ரூ.72 கோடியில் ரெயில் நிலையம் விரிவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த பணியை திட்டமிட்ட காலத்தில் முடிக்கவேண்டும். சென்னையிலிருந்து புதுவை-கடலூர் ரெயில் பாதை குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டியுள்ளது. வருகிற மார்ச் 6-ந் தேதி திருச்சியில் தெற்கு ரெயில்வே கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதுவைக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
- மின்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பிரீபெய்டு மீட்டரை மக்கள் விரும்புவதாக சொல்கிறார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும். பாராளு மன்றத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. பிரதமர் மோடியும், பா.ஜனதாவினரும் ராகுலின் கேள்விக்கு பயந்து தப்பியோடி ஒளிந்து கொண்டனர்.
புதுவையிலும் அதானி குழுமம் கால் பதித்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்துறை தனியார்மயத்தில் அதானி, டாடா, வெளிநாட்டு நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இதுபற்றி அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பிரீபெய்டு மீட்டரை மக்கள் விரும்புவதாக சொல்கிறார். செல்போன் நிறுவனங்கள் போஸ்ட்பெய்டு, பிரீபெய்டு என 2 வழிமுறைகளை தருகிறது. விருப்பமான வழிமுறையை நாம் தேர்வு செய்ய முடியும். அதேபோல மின்துறையில் இத்திட்டத்துக்கு அரசால் விண்ணப்பம் கோர முடியுமா?
தனியாரிடம் மின்துறையை தாரை வார்க்கும்நேரத்தில் எதற்கு பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கொண்டுவர வேண்டும்? 1991 முதல் கூட்டுறவு நிறுவனங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனால் கூட்டுறவு நிறுவனம் அனைத்தும் நலிவடைந்து, சீர்குலைந்து போயுள்ளது. பாண்லே கூட்டுறவு பால் நிறுவனத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பால் கிடைப்பதை விட மது அதிகமாக தடையின்றி கிடைக்கிறது. தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. புதுவையில் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் உற்பத்தியாளர்கள் பாலை தர முன்வருவதில்லை.
அதேநேரத்தில் பால் விற்பனை விலை தமிழகத்தைவிட புதுவையில் அதிகமாக உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களுக்கு, சங்கங்களுக்கு பல ஆண்டாக தேர்தல் நடத்தப்படவில்லை. கூட்டுறவு நிறுவனங்களை சீரமைக்கக்கோரி மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்ப உள்ளேன்.
வருமானத்தை பெருக்கவே ரெஸ்டோ பார் வழங்குவதாக முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார். ரெஸ்டோ பார்களில் விற்கப்படும் மதுக்களுக்கு கலால்வரி செலுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ரெஸ்டோ பார்களுக்கு விற்பனை வரி விதிக்க வேண்டும்.
வருமானத்தை பெருக்க வேண்டும் என கூறும் முதல்-அமைச்சர் மது கடைகளையும் சாராயம், கள்ளுக்கடைகள் போல ஏலம் விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைத்திலிங்கம் எம்.பி தொடங்கி வைத்தார்.
- பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மணவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சி முதலியார்பேட்டை வேல்ராம் பட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையேற்று வைத்திலிங்கம் எம்.பி பரிந்துரையின் பேரில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது. வைத்திலிங்கம் எம்.பி. முதலியார்பேட்டை தொகுதி சம்பத் எம்.எல்.ஏ ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், கல்வித் துறை துணை இயக்குனர் சிவராமரெட்டி, துணை ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மணவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- வைத்திலிங்கம் எம்.பி பேட்டி
- ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் தீர்ப்பு பொருந்தும். புதுவையில் கவர்னர் தமிழிசை இதற்கு மறுப்பு கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாரையும் எப்போது மதிக்காத மத்திய அரசு தீர்ப்பின் உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வராமல் உள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால் எப்போதும்போல, பா.ஜனதா மத்திய அரசின் கைப்பாவையான கவர்னர் தமிழிசை, தீர்ப்பினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கூறியுள்ளார். புதுவை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும். இவை அனைத்தும் ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் தீர்ப்பு பொருந்தும்.
புதுவையில் கவர்னர் தமிழிசை இதற்கு மறுப்பு கூறியுள்ளார். இதிலிருந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பாக இருந்தாலும் அதை மதிக்கமாட்டேன் என்று தடுப்பு பேசுவதை அறிய முடிகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தோர் இப்படிதான் செய்வார்கள் என்பதற்கு இந்த வார்த்தைகளே உதாரணம். தனது அதிகாரம் பறிபோகக்கூடாது என்பதற்கான நடவடிக்கை எடுக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுவையில் ஆளும் கூட்டணிமியிலுள்ள பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதை தட்டிக்கேட்காதது வேதனையளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் மக்களுக்கு உரிய பணி செய்வதற்கான அதிகாரத்தை ஆளும் கட்சிகள் பெறாதது ஏன்.?
புதுவை காமராஜர் என தன்னை அழைக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மதுபானக்கடைகளை ஊக்குவிப்பதால் காமேராஜர் பெயரை பயன்படுத்த கூடாது. கமிஷன் ஆட்சியாக கர்நாடகத்தில் பா.ஜனதா மாறியதால் தூக்கியெறியப்பட்டது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மதுபானக் கொள்ளை கமிஷனில் தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் தூக்கியெறிவார்கள்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி கூறினார்.
- வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
- பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு தொடர்பாக சார்பதிவாளர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நில அபகரிப்பை தடுக்க கோவில் சொத்துக்களுக்கு பூஜ்ய மதிப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் கோவில் சொத்து அபகரிப்பை தடுக்க முடியும்.
காலாப்பட்டு பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பை தடுக்க அப்பகு தியில் கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.