என் மலர்
நீங்கள் தேடியது "Valarpirai Shashti"
- வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு அதிகாலை 16 வகையான அபிஷேக பொருட்கள் மற்றும் மூலிகை விபூதி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அடுத்த ராமலிங்கம்பட்டி போகர் நகரில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதன்படி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு அதிகாலை 16 வகையான அபிஷேக பொருட்கள் மற்றும் மூலிகை விபூதி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திண்டுக்கல், கரூர், தாராபுரம், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மூலிகை விபூதி பிரசாதமாக கோவில் ஆதீனம் அறிவாதினம் வழங்கினார்.