search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valliyoor"

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணி த்திட்டம் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு சார்பில் வளர் இளம் பருவத்தின ருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரி வரலாற்று துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணி த்திட்டம் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு சார்பில் வளர் இளம் பருவத்தின ருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ராஜன் முன்னிலை வகி த்தார். ஆர்.பி.எஸ்.கே. மருத்துவ அலுவலர் கடற்கரை குமார் தலைமை யிலான மருத்துவ குழுவி னர் கண், தோல் மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட பரிசோ தனை களை செய்தனர். ஏராள மான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமி ற்கான ஏற்பாடுகளை இளஞ்செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, நாட்டு நலப் பணித்திட்டம் அலுவலர்கள் ராஜராஜேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், அகத் தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கி ணைப்பாளர் புஷ்ப ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    சுற்றுலா தினம்

    மேலும் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரி வரலாற்று துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வரலாற்று துறை தலைவர் பால சரஸ் வதி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ராஜேஷ் கலந்து கொண்டு "மனித வாழ்வில் சுற்றுலாவின் தாக்கம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வரலாற்றுத்துறை தலைவர், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். மாணவி சுபரிஷா நன்றி கூறினார்.

    வள்ளியூர் அருகே மிட்டாய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள வடக்கு வள்ளியூர் காமராஜர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 43). மிட்டாய் வியாபாரி. 

    நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலசுப்பிரமணியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலசுப்பிரமணியனின் மனைவி ராதாபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

     கடந்த சில நாட்களாக அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று பாலசுப்பிரமணியன் கூறி வந்துள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  

    இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.  

    இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளத்தில் சமையல் செய்தபோது தீப்பிடித்து மூதாட்டி பலியானார்.
    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளம் மீன்கடை தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மேரி(வயது 80). பெரியசாமி இறந்துவிட்டதால் மேரி தனியாக வசித்து வந்தார். 

    சம்பவத்தன்று இரவு சமையல் செய்வற்காக ஸ்டவ் அடுப்பை பற்றவைத்தபோது எதிர்பாராதவிதமாக மேரி மீது தீப்பற்றியது.

    இதில் உடல் கருகிய நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.

    வள்ளியூர்:

    தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், தேசிய தர மதிப்பீட்டுக்குழு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் திலகேஷ்வர்மா, டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். தெற்குகள்ளிகுளம் தர்ம கர்த்தா டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நியூஸ் லெட்டர் இதழை வெளியிட்டார். அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணை ப்பாளர் புஷ்பராஜ் வாழ்த்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல் மற்றும் போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை பேரா சிரியர்கள் ராய்சிச் ரெனால்ட், பிருந்தாமலர், ராஜகுமாரி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
    • வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார்.

    வள்ளியூர்-

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக "தொழில் முனைவோரின் எதிர் கால திட்டம்-2047" என்ற தலைப்பில் தேசிய அளவி லான கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளர் வி.பி.ராம நாதன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஆர்.முருகேசன் தொடக்க உரையாற்றினார். முதல் அமர்வில் சிறப்பு விருந்தி னராக வணிகவியல் துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் தர்ம ரஜினி சிறப்புரை யாற்றினார். 2-ம் அமர்வில் கேரளா, கொச்சின் பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் அருணாசலம் இந்தியாவில் தொழில் முனைவோரின் எதிர்கால திட்டம் தொடர்பான கருத்து க்களை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவி களுடன் கலந்து ரையாடல் நடை பெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேரா சிரியர்கள் செய்திருந்தா ர்கள். கருத்தரங்கில் தேசிய தர மதிப்பீட்டு குழு தலைவர் புஷ்பராஜ், அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவ லர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஒருங் கிணைப் பாளர் வேல் பாண்டி நன்றி கூறினார். 

    • ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் முகாமிற்கு தலைமை தாங்கினர்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் உள்ள டி.டி.என். கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலைச் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துக்கொண்டு முகாமினை நடத்தினர். முன்னதாக ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முகாமிற்கு கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி கலந்து கொண்டார்கள். முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ரத்ததான நன்மைகளை மாணவரிடம் எடுத்துக் கூறினார். ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி முகமது இபாம், இளைஞர் செஞ்சிலுவை சங்க அதிகாரி ராம்கி மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ரராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் செல்வராஜா தலைமையில் யூனியன் கூட்டம் நடந்தது.
    • ரூ. 1 கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியன் சேர்மனும், வள்ளியூர் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் செல்வராஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் கூட்டம் நடந்தது. வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், ஒன்றிய பொறியாளர் சென்பகவள்ளி, சபரிகாந்த், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர் ரைகானா ஜாவித், பிலிப்ஸ், பொன்குமார், டெல்சி ஒபிலியா, அலெக்ஸ் பால் கொசிஐின், ஜெயா, மகாலெட்சுமி, மல்லிகாஅருள், பாண்டித்துரை, சாரதா, ஜெயலெட்சுமி, அனிதா, அஜந்தா மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.பின்னர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

    • நேரு நர்சிங் கல்லூரியில் மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்தின் சார்பாக மின் சிக்கன வார விழா நேரு நர்சிங் கல்லூரியில் கொண்டாடப் பட்டது. மின்வாரிய செயற்பொறியாளர் வளன் அரசு தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் டி.டி.என் லாரன்ஸ் மற்றும் கல்லூரி முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மின் சிக்கனம் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த குமார், செல்வ கார்த்திக், பத்மகுமார், உதவி மின் பொறியாளர்கள், மின் வாரிய பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். 

    • ஜெயசெல்வன் சென்னை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
    • பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் தனது 5 மாத ஊதியத்தை ஜெயசெல்வனுக்கு வழங்கினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள வேப்பிலான்குளம் பஞ்சாயத்து சுண்டவளை கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல், சமையல் தொழிலாளி. இவரது மகன் ஜெயசெல்வன் (வயது 20).

    மாற்றுத்திறனாளியான இவர் சென்னை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த மாதம் மாநில அளவில் ஈரோட்டில் நடந்த கூடைப்பந்து போட்டி யில் இவரது குழுவினர் முதலிடம் பிடித்தனர்.

    இதைதொடர்ந்து தேசிய அளவில் கடந்த 5-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் தனது குழுவினருடன் கலந்து கொண்டு 2-ம்இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    சாதனை படைத்த ஜெய செல்வனை பாராட்டிய வேப்பிலான் குளம் பஞ்சயத்து தலைவர் வேல்முருகன் அவருக்கு தனது 5 மாத ஊதியத்தை காசோலையாக வழங்கினார். வெற்றிபெற்றது குறித்து ஜெயசெல்வன் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியை எனக்கு யாரேனும் வழங்கினால் உலக அளவில் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் மாண்பினை தலை நிமிர செய்வேன் என்றார்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார்.
    • மருத்துவர் ஜென்சி ஷைலா இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆரோக்கிய வாழ்விற்கான இயற்கை மருத்துவமும், அணுகுமுறைகளும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். இளம் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிருந்தா வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் பாலமுருகன் மற்றும் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் பனிமாதா இயற்கை மருத்துவமனையின் மருத்துவர் ஜென்சி ஷைலா இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து எடுத்துக்கூறினார். முடிவில், இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் கிரிஜா நன்றி கூறினார். இதில் அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வள்ளியூர் பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது.
    • திருட்டில் ஈடுபட்டது சுனில் , செல்வன்,ஜெபாஸ்டின் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    வள்ளியூர்:

    வள்ளியூர், பணகுடி, பழவூர், ராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    அதன்பேரில் திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மேற்பார்வையில் வள்ளி யூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீஸ் காரர்கள் சுரேஷ் , லூர்து டேனியல் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் வள்ளியூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் குமரி மாவட்டம் மயிலாடி புதூரை சேர்ந்த சுனில் (வயது 18), செல்வன் (32) மற்றும் கூத்தங்குழி மேலத்தெருவை சேர்ந்த ஜெபாஸ்டின் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 22 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த வள்ளியூர் சரக போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.

    • விழாவுக்கு வள்ளியூர் மேக்ரோ கல்லூரி சேர்மனும், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார்.
    • சங்கம் கடந்து வந்த பாதையினை பட்டைய தலைவர் எஸ்.என்.தங்கத்துரை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பட்டய நாள் கொண்டாட்டம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடை பெற்றது.

    விழாவில் தலைமை விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் ரோட்டே ரியன் ஜே.கே.குமார் கலந்து கொண்டார். விழாவுக்கு வள்ளியூர் மேக்ரோ கல்லூரி சேர்மனும், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார். பட்டய தலைவர் எஸ்.என்.தங்கதுரை, பட்டய செயலர் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டேரியன் அந்தோணி செல்லத்துரை ரோட்டரி இறைவணக்கம் வாசித்தார். பின்பு ரோட்டே ரியன் முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன் விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை விழாவின் சிறப்பினை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

    பட்டைய தலைவர் எஸ்.என்.தங்கத்துரை சங்கம் கடந்து வந்த பாதையினை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    முன்னாள் மாவட்ட ஆளுநர் பட்டய செயலாளர் நவமணி இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர்களின் சிறப்பினையும் கூறி வாழ்த்துக்களை தெரி வித்தார். பட்டய தலைவர் எஸ்.என். தங்கத்துரை, பட்டய செயலர் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி ஆகியோருக்கு சந்தன மாலை, பொன்னாடை அணிவித்தனர்.

    முதன்மை விருந்தினர் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே.கே.குமாரை முன்னாள் துணை ஆளுநர் ரோட்டேரியன் ரமேஷ் வலங்கை புலி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜே.கே.குமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சின்போது முன்னாள் சங்க தலைவர்களுக்கு பரிசு பொருட்களை பட்டய தலைவர், செயலர் வழங்கினர். மாவட்ட துணை ஆளுநர் வாழ்த்தி பேசினார். விருந்தினர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை ரோட்டேரியன் மேஜர் எல்.சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திசையன்விளை எலைக்ட் ரோட்டரி சங்கம், கன்னியாகுமரி ரோட்டரி சங்கம், நாகர்கோவில் மிட்டவுன் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் சவுத் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், வள்ளியூர் ரோட்டரி சங்கம், திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்கம், பேர்ல்ஸ் சிட்டி தூத்துக்குடி ரோட்டரி சங்கம், திருநெல்வேலி வெஸ்ட் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் ரோட்டரி சங்கம் ஆகிய சங்கங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து ெகாண்டனர்.

    கலந்து கொண்ட அனைவருக்கும் தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை சிறப்பு பரிசுகளை வழங்கினார். செயலர் சுதிர் கந்தன் நன்றி கூறினார்.

    ×