என் மலர்
நீங்கள் தேடியது "Vandhe Bharat Train"
- வந்தே பாரத் ரெயிலை பெண் லோகோ பைலட்டுகள் மட்டும் இயக்கினர்.
- அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில் எண் 22223, சி.எஸ்.எம்.டி-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், லோகோ பைலட் முதல் டிக்கெட் பரிசோதகர் வரை பெண்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரெயிலை பெண் லோகா பைலட் சுரேகா யாதவ், உதவி லோகோ பைலட் சங்கீதா குமாரி ஆகியோர் இயக்கினர்.
இதில் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரெயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில் பணிப்பெண்கள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.
மத்திய ரயில்வே பயணிகள் ரயில் மேலாளர் ஸ்வேதா கோன், ஒரு பெண் பிரசவம் போன்ற கடினமான பணியைச் செய்ய முடிந்தால், அவரால் எதுதான் செய்ய முடியாது? ஒரு பெண் திறமையானவராக மாறும்போது அவர் தனது முழு குடும்பத்தையும் உயர்த்த முடியும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும் என தெரிவித்தார்.
- தற்போது உள்ள வந்தே பாரத் ரெயிலை விட புதிதாக விடப்போகும் வந்தே பாரத் ரெயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகின்றன.
- ரெயிலுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை:
நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மைசூரு வரை சென்று வருகிறது.
தமிழக-கர்நாடக மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. சென்னை-பெங்களூரு இடையே உள்ள 362 கி.மீ.தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடைகிறது.
சதாப்தி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 40 நிமிடங்களில் செல்கிறது. வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
தற்போது உள்ள வந்தே பாரத் ரெயிலை விட புதிதாக விடப்போகும் வந்தே பாரத் ரெயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகின்றன. வெள்ளை மற்றும் நீல கலரில் தற்போது ஓடும் வந்தே பாரத் ரெயிலுக்கு பதிலாக 'ஆரஞ்சு' மற்றும் 'கிரே' கலரில் வெளிவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி புதிய வந்தே பாரத் ரெயிலை வருகிற 12-ந்தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை மங்களூரு வரை நீட்டிப்பு செய்து சேவையை தொடங்கி வைக்கிறார். இது தவிர தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு முக்கிய ரெயில்வே திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய வந்தே பாரத் ரெயிலில் இருக்கைகள் மேலும் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்சிகியூடிவ் சேர் காரில் பயணிகள் கால் வைப்பதற்கான வசதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய வந்தே பாரத் ரெயிலை பெங்களூரில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த ரெயிலுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.