என் மலர்
முகப்பு » Varagi Amman Temple
நீங்கள் தேடியது "Varagi Amman Temple"
- வருசாபிஷேகத்தை தொடர்ந்து யாக சாலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
- வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் வேம்பார் சாலையில் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்து 2-ம் ஆண்டு வருசாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இதனை த்தொடர்ந்து யாக சாலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்ப ட்டது. பின்னர் அன்னை வராகிக்கு பல்வேறு வகையான பழங்கள், பால், மஞ்சள், பன்னீர், சந்தனம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அன்னை வராகிக்கு, அருள் வாக்கு சித்தர் சக்தி சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
×
X