search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Various projects"

    • அமைச்சர் எ.வ.வேலு தகவல்
    • ஒரு கோடியே 58 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, தேவனந்தல் ஆகிய கிராம ஊராட்சியில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்ற அற்புதமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது. அய்யம்பாளையம் கிராம ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி, பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேவனந்தல் ஊராட்சியில் ஒரு கோடியே 58 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கு அரசு பஸ்சில் கட்டணம் இல்லா பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கல்லூரி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    அடிஅண்ணாமலை பகுதியில் கல் குவாரி தொடர்புடைய பணிகளை செய்து வந்தவர்கள் ஓட்டல், பெட்டிக்கடை உள்ளிட்ட தொழில்களை செய்ய முன்வந்தால் அவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகளை நான் பெற்றுத் தருகிறேன்.

    மக்களின் மனதை புரிந்து உதவி செய்து வருகிறேன். நான் சம்பாதிக்கும் பணத்தை நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறேன் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி ஸ்ரீதரன், கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், நகராட்சி ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், குட்டி புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×