என் மலர்
நீங்கள் தேடியது "varun chakravarthy"
- டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன்.
- ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதை போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி தங்கள் ஆதிக்கத்தை தொடரும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா தொடர்ச்சியாக இரண்டு ஐசிசி பட்டங்களை வெல்லும் என்று நினைக்கிறேன். கிளென் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை புரிந்து கொள்ளவது கடினம். இறுதியில் குல்தீப் யாதவ் பந்தில் மேக்ஸ்வெல் வெளியேறுவார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.
அதனால் டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன். அதிலும் குறிப்பாக ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம். உடனடியாக வருணிடம் பந்தை கொடுங்கள். முதல் 10 ஓவர்களில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஹெட்டிற்கு சவால் விடுவேன். இதுவே எனது உத்தியாக இருக்கும்.
என்று அஸ்வின் கூறினார்.
- முகமது ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கானலி டக் அவுட்டாகி வெளியேறினார்.
- போட்டியின் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி முதல் பந்திலேயே ஹெட் விக்கெட்டை தூக்கினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
முகமது ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கானலி டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.
போட்டியின் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி முதல் பந்திலேயே ஹெட் விக்கெட்டை தூக்கினார். இதனால இந்திய அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஹெட் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்துவார் என்று முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்திருந்தார்..
இது குறித்து பேசிய அஸ்வின், "இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.அதனால் டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன். அதிலும் குறிப்பாக ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம். உடனடியாக வருணிடம் பந்தை கொடுங்கள். முதல் 10 ஓவர்களில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஹெட்டிற்கு சவால் விடுவேன். இதுவே எனது உத்தியாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அதிரடியாக விளையாடிய ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, பாலிவுட் நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த ட்ரெண்டில் இணைந்து வருண் சக்கரவர்த்தியும் அந்த இன்ஸ்டா பதிவில் தவானை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.
இதற்கு முன், விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸின் இன்ஸ்டா கணக்கிற்கு பதில் பிலிப்ஸ் நிறுவனத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணியினர் 4 சுழல் வியூகத்துடன் வருவார்கள்.
- வருண் பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள்.
துபாய்:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் நாளை நியூசிலாந்து அணி மோத உள்ள நிலையில் நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்கு எதிரான கடைசி லீக்கில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரு தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டியிலும் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே அவரது பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள். அவர் போன்ற மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பவுலருக்கு எதிராக பகலில் பேட் செய்வது சற்று எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.
மொத்தத்தில் இந்திய அணியினர் 4 சுழல் வியூகத்துடன் வருவார்கள். அனைவரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள். இது எப்போதும் சவாலான விஷயம். அவர்களை சமாளிக்க தெளிவான திட்டமிடலுடன் தயாராக வேண்டும். எங்களது பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் பெரிய போட்டிகளில் எழுச்சி பெறக்கூடியவர். பல முறை நியூசிலாந்து அணிக்காக இதை செய்திருக்கிறார். அது மட்டுமின்றி உலகில் உள்ள வெவ்வேறு ஆடுகளங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு ரன் எடுப்பதில் தனித்துவமான ஆட்டக்காரர்களில் ஒருவர். இது அவருக்குரிய நாளாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்திய அணி துபாயில் மட்டும் ஆடுவது அவர்களுக்கு சாதகமான அம்சமா? என கேட்கிறீர்கள். போட்டி அட்டவணையை உருவாக்குவது எங்களது கையில் இல்லை. இது ஐ.சி.சி.யின் முடிவு. அதனால் அது பற்றி நாங்கள் அதிகமாக கவலைப்பட தேவையில்லை. இந்திய அணி தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயிலேயே விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. நாங்களும் இங்கு ஒரு ஆட்டத்தில் ஆடியுள்ளோம். அதில் கிடைத்த அனுபவத்தில் இருந்து சீக்கிரமாக கற்றுக்கொள்கிறோம்.
இந்த தொடரின் தற்போதைய நிலையை பார்த்தால், 8 அணிகளில் இருந்து 2 அணியாக இறுதி சுற்றுக்கு வந்துள்ளோம். எங்களது இடத்தில் இருந்து பார்த்தால், இது பரவசமூட்டும் ஒரு சூழல். இன்னும் ஒரு ஆட்டம் தான் எஞ்சியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
பாகிஸ்தானுக்கும், துபாய்க்கும் மாறி மாறி அலைந்தது கொஞ்சம் சோர்வாகத் தான் இருந்தது. லாகூரில் இருந்து துபாய்க்கு வருவதற்கே ஒரு நாள் சரியாகி விட்டது. ஆனாலும் பயணக்களைப்பில் இருந்து மீண்டு இறுதிப்போட்டிக்கு திட்டமிடுவதற்கும், பயிற்சி செய்வதற்கும் இரு நாட்கள் உள்ளது. நிறைய பயிற்சி செய்வதை விட உடலுக்கும், மனதுக்கும் சரியான இணைப்பு இருக்க வேண்டியது முக்கியம். அடுத்த இரு நாட்களில் இதில் தான் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்.
- வில் யங் - ரச்சின் ரவீந்திரா ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
- ரச்சின் ரவீந்திராவை விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரச்சின் ரவீந்திரா அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். இதனை எதிர்த்து ரவீந்திரா முறையீடு செய்ய 3 ஆவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார்.
உடனடியாக அடுத்த பந்தை ரவீந்திரா தூக்கி அடித்தார். இந்த கடினமான கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயஸ் தவறவிட்டார். ஒரே ஓவரில் 2 முறை தாவீந்திரா தப்பித்தார். ஆனால் அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக வில் யங் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப், வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். தற்போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
- டாம் லதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
- பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து, டாம் லாதாம் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் - பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்துள்ளது.
- சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த மிட்செல் 63 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து, டாம் லாதாம் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் - பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் - பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த மிட்செல் 63 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பிரேஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் 51 ரன்கள் அடித்தார்.
- சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி நேற்றிரவு இந்தியா வந்தடைந்தது. தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா சென்னை வந்துள்ளனர். வருகிற 22-ம் தேதி ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் வருண் மற்றும் ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடுகின்றனர்.
அதன்படி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதற்காக சென்னை வந்துள்ளனர். இந்த தொடருக்காக வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், சி.எஸ்.கே. அணியுடன் இருவரும் விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளனர்.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது சென்னைக்கு செல்ல இருந்தேன்.
- அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கடைசியாக இடம் பிடித்தவர் வருண் சக்கரவர்த்தி.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்துடன் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தை வருண் ஈர்த்தார். இதனையடுத்து ஒருநாள் தொடரில் இடம் கிடைத்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்தார். ஆனால் லீக் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கடினம் என பேசப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை நாக் அவுட் போட்டிகளில் களமிறங்கி அசத்தினார்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான வாய்ப்பு குறித்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது சென்னைக்கு செல்ல இருந்தேன். அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்றனர். பின் ஒருநாள் தொடர் முடிந்து வீட்டிற்கு கிளம்பலாம் என இருந்தபோது சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாட துபாய் செல்ல போகிறோம் என்றனர். இப்போது கோப்பையை வென்றுவிட்டோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு வருண் கூறினார்.