என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vase"
- 20 துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், 12 துப்புரவு பணி ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.
- நெகிழி குவளைகள் போன்றவை தூய்மை பணியாளா்கள் மூலம் அகற்றப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாநகரை குப்பையில்லா மாநகராக உருவாக்குவதற்காக மாநகரில் சிறப்புக் கூட்டு தூய்மைப் பணி முகாம் வாரந்தோறும் புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று ஆட்டு மந்தை தெரு, மீன் சந்தை உள்புறம், படைவெட்டி அம்மன் கோயில் தெரு, நெல்லுமண்டித் தெரு, காமராஜா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் சிறப்பு கூட்டு தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மேயா் சண். இராமநாதன் தொடக்கி வைத்தாா்.
இப்பணியில் 550 தூய்மை பணியாளா்கள், 20 துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், 12 துப்புரவு பணி ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.
இதன் மூலம், பல்வேறு இடங்களில் புல் செடிகள், முட்புதா்கள், மண் முட்டுகள் போன்றவை கனரக வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டன.
மேலும், நன்னீா் தேங்கி டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண் பாண்டங்கள், நெகிழி குவளைகள் போன்றவை கொசுப்புழு தடுப்பு களப் பணியாளா்களால் கண்டறியப்பட்டு, தூய்மைப் பணியாளா்கள் மூலமாக அகற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் சரவணகுமாா், மாமன்ற உறுப்பினா் பாப்பா சொக்கா ரவி, மாநகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி, துப்புரவு ஆய்வாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.