என் மலர்
நீங்கள் தேடியது "VAYALUR MURUGAN TEMPLE FESTIVAL"
- வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி:
திருச்சி பிரசித்தி பெற்ற குமாரா வயலூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை தினமும் காலை லட்சார்ச்சனை, சண்முகார்ச்சனை, மாலை காலை நிகழ்ச்சிகள், இரவு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முக்கிய விழாவான நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி சந்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிங்காரவேலர் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளித்தலும் அதாவது சூரசம் ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இறுதி நாளான இன்று ரவு 7 மணியளவில் முருகன் தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன், போஸ்கார் பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். குமாராவயலூரில் சோமரசம்பேட்டை காவல் நிலையம் சார்பாக தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டு, முசிறி துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், ஜீயபுரம் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் ஆகியோரது மேற்பார்வையில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.