என் மலர்
நீங்கள் தேடியது "Veeramanikapuram"
- மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வீரமா ணிக்கபுரம் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வீரமாணிக்கபுரம் 43-வது வார்டு பகுதியில் சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளது.
நெல்லை:
மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வீரமாணிக்கபுரம் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் நாட்டாண்மை பொன்ராஜ் தலைமையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரி யப்பபாண்டியன், தமிழ்நாடு தேவேந்திரகுல மக்கள் பாதுகாப்பு பேரவை குணா பாண்டியன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, வீரமாணிக்கபுரம் 43-வது வார்டு பகுதியில் சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளது. ஆனால் இப்பகுதியில் குடிநீர் இணைப்பு, பாதாளச்சாக்கடை, விளையாட்டு பூங்கா, நூலகவசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை.
இது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.எனவே உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.