search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veerapandiya Kattabomman"

    • ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்!
    • தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்!

    சென்னை:

    புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்! அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • ராஜபாளையம் அருகே உள்ள என். புதூர் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தின விழா நடந்தது.
    • தே.மு.தி.க.வினரும், தங்கராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராஜபாளையம்

    வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தின விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள என். புதூர் கிராமத்தில் நடந்தது. ஊர் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினர் மற்றும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    விருதுநகர் மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார், வக்கீல் பத்மாவதி கண்ணன் முன்னிலையில் ஏராளமான அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் எம்.பி.லிங்கம் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்தனர். ம.தி.மு.க. சார்பில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் ஞானராஜ் தலைமையில் தி.மு.க.வினரும், ஒன்றிய செயலாளர் ஹாஜா ஷெரிப் தலைமையில் தே.மு.தி.க.வினரும், தங்கராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   

    ×