என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "veeravanallur"
- வீரவநல்லூர் பங்களா கடை பஜார் தெருவை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 75). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.
- இவருக்கு சொந்தமான பந்தல் குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
நெல்லை:
வீரவநல்லூர் பங்களா கடை பஜார் தெருவை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 75). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.
ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
இவருக்கு சொந்தமான பந்தல் குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அறிந்த வீரவநல்லூர் போலீசார் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அந்த குடோனில் இருந்த சவுக்கு கம்புகள், ஓைல கீற்றுகள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமாகின. இதனால் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது.
விசாரணை
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீ விபத்து ஏற்பட்ட குடோனில் சுமார் 300 சவுக்கை கம்புகள் மற்றும் தென்னை ஓலை கீற்றுகள் இருந்துள்ளன. குடோனை சுற்றிலும் வீடுகள் உள்ளன.
இதனால் அதில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்து நெருப்பு பொறி பறந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் அல்லது குடோனில் தகர செட் போடப்பட்டுள்ளதால் வெயிலின் தாக்கத்தால் தீ உண்டாகியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு(வயது 23).
- வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில் மட்டும் தோல்வி அடைந்தார்.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு(வயது 23).
இவர் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தார். சமீபத்தில் நடந்த ராணுவத்திற்கான உடல் தகுதி தேர்வில் அவர் பங்கேற்றார். அதில் தேர்ச்சி பெற்ற வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில் மட்டும் தோல்வி அடைந்தார்.
அதாவது கண் பார்வை திறன் தொடர்பான சோதனையில் அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதாக கூறிவிட்டனர். இதனால் அவருக்கு ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டது.
இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த வருத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்திம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- வீரவநல்லூர் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 26). கட்டிட தொழிலாளி.
- மோட்டார் சைக்கிள் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சியை சேர்ந்தவர் முத்தையா பாண்டியன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 26). கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று இரவு இசக்கிமுத்து வேலைக்கு சென்றுவிட்டு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.
இரவு நேரத்தில் வந்த மர்ம நபர் யாரோ மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்திருப்பதை அறிந்த இசக்கிமுத்து, வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் யார்? எதற்காக தீ வைத்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- கல்லிடைக்குறிச்சி கோட்டத்தை சேர்ந்த ஓ.துலுக்கர்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- 6-ந் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் ( விநி யோகம்) சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
கல்லிடைக்குறிச்சி ேகாட்டத்தை சேர்ந்த ஓ.துலுக்கர்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் ( சனிக்கிழமை) மின் விநியோகம் தடைபடும்.
அதன்படி ஓ.துலுக் கர்பட்டி துணை மின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் ஆழ்வான்துலுக்கர்பட்டி, ஓ.துலுக்கர்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்ப்டடி, தாழையூத்து, பனையங் குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல் வீரவ நல்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கல்லிடைக் குறிச்சி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், கூனி யூர், வெள்ளாங்குளி, புதுக்குடி, ரெங்கசமுத்திரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும். அம்பாசமுத்திரம் துணை மின்நிலையம் மூலம் மின்விநியோகம் பெறும் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 2 மணி வரை மின்தடை இருக்கும். மணிமுத்தாறு துணை மின்நிலையத்திற்குட்பட்ட மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவி குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை. ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கடையம் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆவுடையானூர், மணல் காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், மற்றும் சிவநாடானூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
- மாரியப்பனும், அவரது மனைவியும் பிரேமாவை சமாதானம் செய்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு அரியநாயகிபுரம் செண்பகவல்லி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி பிரேமா(வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று பிரேமா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொட்டாரக்குறிச்சியில் உள்ள தனது சகோதரர் மாரியப்பன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கு மாரியப்பனும், அவரது மனைவியும் பிரேமாவை சமாதானம் செய்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த பிரேமா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரேமா உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் காந்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- வீரநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
வீரவநல்லூர் நயினார் காலனி களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி(வயது 40). விவசாயி. இவரது மனைவி அம்பிகா(38). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் காந்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் நேற்று இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக வீரநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சய் காந்தி தனது வயலில் வாழை பயிரிட்டுள்ளார். அதற்கு வரப்பு வெட்டுவது சம்பந்தமான வேலைக்கு தனது மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால் அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
- திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகள் நிவேதா(வயது 20). இவர் வீரவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றஅவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை சக ஊழியர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- வீரவநல்லூரில் சாலை விரிவாக்க பணிக்காக பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- கார் பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கொம்பையா பாண்டியன் ( வயது 27).
இவர் உறவினருடன் தனது காரில் குற்றாலம் சென்றார். நேற்று நள்ளிரவில் மீண்டும் அவர்கள் ஊர் திரும்பினர்.
வீரவநல்லூரில் சாலை விரிவாக்க பணிக்காக பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கமாக வாகனங்கள் செல்லும் சாலைக்கு அருகே மற்றொரு சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் இதனை கவனிக்காத கொம்யைா பாண்டியன் வழக்கமான சாலையில் சென்றுள்ளார்.
அப்போது கார் பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வீரவநல்லூர் போலீசார் விரைந்து சென்று கொம்பையா பாண்டியன் உள்ளிட்டவர்களை உடனடியாக மீட்டனர். இதில் அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏற்படவில்லை.
மேலும் பள்ளத்தில் கவிழ்ந்த காரும் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராம உதயம் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- 1100 மரக்கன்றுகளை நட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட நிர்வாகம், வீரவநல்லூர் பேரூராட்சி மற்றும் கிராம உதயம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1100 மரக்கன்றுகள் நடும் விழா தட்டன் குளம் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். சேரன்மகாதேவி சப் -கலெக்டர் ரிஷாப் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் வழக்கறிஞரும், ஆலோசனை குழு உறுப்பினருமான புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். பேரூராட்சி உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், வீரவநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் சித்ரா, செயல் அலுவலர் சத்தியதாஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இதில் கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் தன்னார்வ தொண்டர்கள், கிராம உதயம் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 1100 மரக்கன்றுகளை நட்டனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 66) ஜோதிடர். இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்ற விஜயா (62). இவர் தினமும் காலையில் தனது வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல் நேற்று காலை 7 மணி அளவில் தனது வீட்டின் முன் விஜயா நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் விஜயா கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா அலறினார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்கள் பறித்து சென்ற சங்கிலியின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த தெருவில் போலீசார் சார்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
வீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி மர்மநபர்கள் பறித்து சென்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்