search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle repair"

    • ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் வாகனத்தில் இன்று அழைத்து சென்றனர். திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனம் பழுதடைந்து நின்றது.

    இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார். இருப்பினும் வாகனம் சரியாகாத காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் வாகனத்தில் இருந்ததால் போலீசார் வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்றனர்.

    மேலும் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
    • நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது.

    இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றன.

    தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    ×