என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "verbal dispute"
- 14 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
- 16 வயதுடைய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டில் நேற்று முன்தினம் இரவு தெருகூத்து நடைபெற்றது. இதைபார்த்து கொண்டிருந்த 14 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் 16 வயது சிறுவன் 14 வயது சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த 14 வயது சிறுவன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் 16 வயதுடைய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல் (வயது 42)கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் கொத்தனார் வேலை பார்க்கும் 4 பேர் அங்கு வந்து அவர்களும் ஏரியில் குளித்தனர். இந்நிலையில் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஞானகுரு, ராஜசேகர் ஆகியோருக்கும் கொத்தனார் 4 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார். அப்போது சக்திவேலுக்கும் ஞானகுரு, ராஜசேகருகும் இடைேய தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர கீழே கிடந்த கட்டையை எடுத்து சக்திவேலை பலமாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சக்திவேல் மயங்கி கீழே விழுந்தார்.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சக்திவேலை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஞானகுரு ,ராஜசேகரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அய்யனார் கோவில் காப்பு காட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த ஞானகுரு, ராஜசேகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரையும் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
- ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
- இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணம் தவழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் ஏன் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராமதாசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மோதலில் ஈடுபட்டு பகத்சிங்கை தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான நிலை அங்கு உருவானது. இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
- கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- காயமடைந்த ஹரி மணிபாலன் மற்றும் இளைய பெருமாள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே அப்பியம் பேட்டை சேர்ந்தவர் சிவபிரகாசம். அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலத்தில் சிவபிரகாசத்திற்கும் , அதே பகுதியை சேர்ந்த அறிவழகனுக்கும் திடீரென்று வாய் தகறாறு ஏற்பட்டது. தகவல் அறிந்த சிவப்பிரகாசத்தின் தந்தை உத்திராபதி அறிவழகனிடம் தட்டி கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் திடீரென்று உத்திரபதியை திட்டினார்கள். அப்போது உத்திராபதியின் மற்றொரு மகன் ஹரி மணிபாலன் இது சம்பந்தமாக தட்டி கேட்டபோது, இரும்பு பைபால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தகராறு இரு தரப்பினருக்கும் மோதலாக மாறியது. இதில் காயமடைந்த ஹரி மணிபாலன் மற்றும் இளைய பெருமாள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் இளையபெருமாள், அறிவழகன், தமிழரசன், தமிழ்ச்செல்வன், ரவிச்சந்திரன், கணேசமூர்த்தி மற்றும் செல்வக்குமார், உத்திராபதி, ராஜ்குமார், சிவப்பிரகாசம், ஹரி மணிபாலன், ராம்கி ஆகிய 12 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்