என் மலர்
நீங்கள் தேடியது "Verification of land documents of farmers"
- 6572 விவசா–யிகள் தங்களது நில ஆவணங்களின் அடிப்ப–டையில் சரிப்பார்ப்பு செய்யவில்லை.
- மத்திய அரசின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மு.ஷபி அஹமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எம்.கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
நிலமுள்ள அனைத்து விவசாயிகளின் நிதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகள் 11 தவணை–களாக தொகை பெற்று விவசாய பயன்பாட்டிற்காக பயன்படுத்தி உள்ளனர்.
தற்பொழுது 12-வது தவணை தொகை பெறுவதற்கு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விவசாயிகளின் நில ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் விவசாயிகளின் நில ஆவணங்களை சரிபார்க்கும் பணி கிராம வாரியாக அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடக்கிறது.
பி.எம்.கிசான் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகளில் இதுவரை 6572 விவசா–யிகள் தங்களது நில ஆவணங்களின் அடிப்ப–டையில் சரிப்பார்ப்பு செய்யவில்லை.
எனவே, இந்த விவசாயிகள் உடனடியாக தங்களது நில உரிமையினை உறுதி செய்திட பட்டா, சிட்டா, ஆதார் நகல்களுடன் தங்களது வட்டார உதவி வேளாண்மை அல்லது உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அல்லது உதவி வேளாண் வணிகம் மற்றும் விற்பனை அலுவ–லர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
2019 பிப்ரவரி 1க்கு முன்னரே நில உரிமையினை உறுதி செய்தால் மட்டுமே அடுத்த தவணை தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய அரசின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.