என் மலர்
நீங்கள் தேடியது "Veterinary Branch Station"
- கொள்ளிடம் அருகே எருக்கூரில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்பு விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் மாடுகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.
மயிலாடுதுறை:
கொள்ளிடம் அருகே எருக்கூரில் கால்நடை கிளை நிலையம் திறக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் எருக்கூரில் கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் வரவேற்றார்.
ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் ஆய்வாளர் மணிமேகலை கலந்து கொண்டு புதிய கால்நடை கிளை நிலையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவு மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகளை வழங்கியும் விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கான 200 விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்.
இதில் கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் அருள்மொழி மற்றும் கால்நடை டாக்டர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், விவசாயிகள்,கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாடுகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.