என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vetrimaran"

    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.


    விடுதலை படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு.. என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.


    விடுதலை

    இந்நிலையில், 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளது. 


    • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
    • இவர் தற்போது 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

    திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.


    வெற்றிமாறன்

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "நான் என் குழந்தைகளுக்கு 'நோ கேஸ்ட்' (No Cast) என்ற சான்றிதழ் வாங்க முயன்றேன். கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க. பிறகு கோர்ட்டுக்கு போனேன். அங்கேயும் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீங்க சாதி குறிப்பிட்டுத்தான் ஆகணும் என தீர்ப்பு வழங்கிட்டாங்க. இதையடுத்து சாதி சான்றிதழ் எங்கேயும் கொடுக்காதபடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.


    வெற்றிமாறன்

    பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். யாருக்கு தேவையில்லை என்று எண்ணுகிறார்களோ அவர்கள் இதை செய்யலாம். எனக்கு தேவையில்லை அதனால் நான் இதை வாங்கிக்கொள்கிறேன். ஆனால் நம் உரிமையை வாங்க வேண்டிய இடத்தில் நாம் சாதிச்சான்றிதழ் கொடுத்து தான் ஆக வேண்டும்" என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    • திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
    • இவர் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

    திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.


    வெற்றி மாறன்

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் நடிகர்களை தலைவர்கள் என்று கூறுவது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "எம்.ஜி.ஆர் அளவிற்கு எந்த ஒரு நடிகருக்கும் ரசிகர்கள் இல்லை என்று கூறுவார்கள். அவருக்கு முன்னாடி இருந்தவர்களும் அப்படி தான் இருந்தார்கள். நாம் கதாநாயகர்களை, கதாநாயக பிம்பங்களை கொண்டாடுபவர்கள். எப்போதும் நாம் அப்படி தான் இருந்திருக்கிறோம். இன்றும் அப்படி தான் இருக்கிறோம்.


    வெற்றிமாறன்

    நடிகர்களை தலைவர் என்று கூறுவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. முன்னாடி இருந்த நடிகர்கள் அரசியலிலும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தார்கள் அதனால் அவர்களை அவ்வாறு சொல்வது சரியாக இருந்தது. இன்னைக்கு இருக்கும் நடிகர்களை அப்படி சொல்வது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது என்று கூறினார்.

    • இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
    • இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    இளையராஜா -தனுஷ்

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    தனுஷ்

    இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் பாடியுள்ளனர். நடிகர் தனுஷ் முதல்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


    • இயக்குனர் வெற்றிமாறன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.
    • இவர் பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

    திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார். இவர் பல்வேறு கலை மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.


    வெற்றிமாறன்

    இந்நிலையில், பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, "ஒரு விமர்சனம் வரும்பொழுது அதை ஏற்றுக்கொள்வது என்பது ஜனநாயக போக்கு. ஜனநாயக அமைப்பு. அதை எதிர்ப்பது அல்லது நமக்கு எதிரான விமர்சனமே வரக்கூடாது என்பதும் எந்த ரூபத்தில் விமர்சனம் வந்தாலும் அதனை ஒடுக்குவதும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறவர்களை குற்றவாளிகளாக்குவது, அந்த விமர்சனத்தை முன் வைப்பவர்களை தேச விரோதிகளாக்குவது என்பது பாசிசத்தின் அடையாளங்கள். இந்த ஆவணப்படத்தை பார்ப்பது என்பது பாசிசத்திற்கு எதிரான செயலாகத்தான் பார்க்கிறேன். இதனை பகிர்வதும் பாசிசத்திற்கு எதிரான செயல்பாடாக தான் பார்க்கிறேன். இந்த ஆவணப்படத்தை தமிழில் கொடுத்ததற்கு விசிகவிற்கு வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'விடுதலை’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    விடுதலை

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான ஒன்னோட நடந்தா' இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    விடுதலை

    அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது. மேலும், தனுஷ் முதல்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    விடுதலை

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகி கவனம் பெற்றது.


    விடுதலை

    சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.
    • தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

    2007ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, அசூரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்றார். தற்போது நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘விடுதலை’.
    • இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

     

    விடுதலை

    விடுதலை


    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    விடுதலை அறிவிப்பு
    விடுதலை அறிவிப்பு

    இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை வருகிற மார்ச் 8-ம் தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    விடுதலை

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    விடுதலை

    இதையடுத்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று ( மார்ச் 8) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    விடுதலை

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.


    விடுதலை

    இந்நிலையில், 'வட சென்னை' படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி வருத்தமாக கூறியுள்ளார். 'விடுதலை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "வட சென்னை படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன். வட சென்னை பார்ட் 2 எழுதிகிட்டு இருக்காரு, கதை அருமையாக இருக்கிறது விரைவில் வரும்.


    விஜய் சேதுபதி - வெற்றிமாறன்

    யாரோ யூடியூப்ல எது எதோ சொல்றாங்க. அதுனால நான் இதை சொல்லிக்கிறேன். வட சென்னை படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தியிருக்கிறேன். அதனால் படத்தை பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவேன் என்று அந்தப் படத்தை நான் பார்க்கல. பாட்டு மட்டும்தான் பார்த்தேன். இதப்பத்தி வெற்றிமாறான் சார்கிட்டையும் கூறியுள்ளேன்" என்று பேசினார்.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.


    விடுதலை இசை வெளியீட்டு விழா

    இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கூறியதாவது, "இப்படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத ஒரு களத்தில் நடக்கும் ஒன்றாக இருக்கும். வென்றிமாறனின் ஒவ்வொரு கதைக்களமும் தனித்துவமானவை. கடலில் தோன்றும் அலைகளைப் போல. 1500 திரைப்படத்திற்கு இசையமைத்து விட்டேன். இப்போதும் சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு கிடைத்த முக்கியமான இயக்குனர். இதை நான் ஏன் சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திரையுலகிற்கு கிடைத்த நல்லதோர் இயக்குனர் அவர். அதேபோல இப்படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையைக் கேட்பீர்கள்" என்று கூறினார்.

    ×