என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vices"

    • மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி மீளமுடியாமல் வாழ்க்கை வீணாகிறது.
    • தீமைகளிலிருந்து மாணவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின கருத்தரங்கம் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார். பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். சமூக பணித்துறை தலைவர் பேராசிரியர் சிகாமணி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில்:- போதை பொருட்களுக்கு மாணவர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இதனால் அதிலிருந்து மீளமுடியாமல் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. இதன் தீமைகளை அறிந்து கொண்டு மாணவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், மேலும் மாணவர்கள் தங்களை நல்வழிபடுத்தி கொள்ள காவல்துறை எல்லா நேரங்களிலும் துணை நிற்கும் என்றார்.

    போதை பழக்கத்ததால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர். திலீபன் ராஜா விளக்கினார். ஒருங்கிணைந்த சேவை மைய உளவியலாளர் ராஜேஸ்வரி போதை பழக்கத்தில் இருந்து மீள்வது குறித்து கூறினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன் கலந்துகொண்டு பேசினார்.

    முடிவில் மத்திய பல்கலைக்கழக விரிவுரையாளர் சரண்யா சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

    • மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் விளக்கமளித்தார்.
    • போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், விழிப்புணர்வு, ஒழுக்கம் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி அபிஷேக கட்டளை மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் விளக்கம் அளித்தார். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், விழிப்புணர்வு, ஒழுக்கம் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கில்லி வளவன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

    ×