search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay People's Movement"

    • தமிழகத்தில் 20 இடங்களில் விலையில்லா விருந்தகம் நடத்தப்படுகிறது.
    • விஜய்யின் உத்தரவுப்படி இதனை செயல்படுத்து வருகிறோம் என்றார்.

    புதுச்சேரி:

    விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அண்மைக்காலமாக அரசியல் மற்றும் தேச தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்தனர்.

    இன்று புதுவையில் பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்தனர். சட்டமன்றம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்தனர். அதன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வந்த அவர்கள் விஜய்க்கும் பாவேந்தர் பாரதிதாசனுக்கும் வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த புஸ்சி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து தலைவர்களுக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். விஜய்யின் உத்தரவுப்படி இதனை செயல்படுத்து வருகிறோம் என்றார்.

    தமிழகத்தில் 20 இடங்களில் விலையில்லா விருந்தகம் நடத்தப்படுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விஜய் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்னும் பல இடங்களில் இந்த விருந்தகம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    உள்ளாட்சி அமைப்புகளில் விஜய் மக்கள் இயக்கம் நுழைந்தது போல சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் நுழையுமா ? என்ற கேள்விக்கு அனைத்தையும் விஜய் முடிவு செய்வார் என கூறி புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டார்.

    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றிய தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காட்பாடி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது,

    காட்பாடி ஒன்றிய துணைத் தலைவர் கோவிந்தன் முன்னிலையில் சேனூர் மந்தவெளியில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கும், ஜாப்ராபேட்டையில் உள்ள உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் பழரசம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய நிர்வாகி குமார், வினோத்குமார் சேனூர் கவுரவத் தலைவர் அசோக்குமார், செயலாளர் நவீன் குமார், ஜாப்ராப்பேட்டை மன்ற தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பார்த்திபன், அஜித்குமார் மற்றும் திரளான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்.புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி திருப்பூர் வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டரணி சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் குத்புதின் தலைமை தாங்கி நீ மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சின்னதுரை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,மாவட்ட நிர்வாகி பாஷா, சதாசிவம், காங்கேயம் நகர தலைவர் கிருஷ்ணசாமி,அங்கு ராஜ் மற்றும் கார்த்திக் மோகன், செல்வா நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நலிவுற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேலூர் காட்பாடி வஞ்சூர் ஊராட்சியில் நலிவுற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு வாரந்தோறும் விலையில்லா ரொட்டி, பால், முட்டை மற்றும் சிறுதானியம் வழங்கும் திட்டம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில்இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வஞ்சூர் கிளை மன்ற நிர்வாகிகள் வினோத், குமார், பூபாலன்,

    சுரேஷ், சஞ்சய், முனிசாமி, வெங்கட், சிலம்பரசன், கோகுல், காட்பாடி ஒன்றிய துணை தலைவர் கோவிந்தன், காட்பாடி ஒன்றிய துணை அமைப்பாளர் ரமேஷ், சேனூர் நிர்வாகிகள் நவீன் குமார், பிரசாந்த், தினகரன், முகேஷ், டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் பகுதிகளில் ஆதரவின்றி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.
    • குளிர்காலம் தொடங்கியதையடுத்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவி செய்திட நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர் : 

    குளிர்காலம் தொடங்கியதையடுத்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவி செய்திட வேண்டுமென நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி திருப்பூர்வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைமை மாவட்டத் தலைவர் எஸ். குத்புதின் தலைமையில் திருப்பூர் பகுதிகளில் ஆதரவின்றி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சின்னதுரை, மாவட்ட துணைத்தலைவர்கள் அலாவுதீன், ஜெயபிரகாஷ் ,மாவட்ட செயற்குழு கனகராஜ், சித்திக்,மாஸ்டர் பாய், நாகராஜ் மற்றும் காங்கேயம் நகர தொண்டரணி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் அங்கு ராஜ், மாரிமுத்து, மணிகண்டன் ,விவேக் ,வெங்கடேஷ் ,கார்த்திகேயன், மாயவன் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
    • கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் தலைமையில் பல்லடம் தொகுதி பூமலூர் பகுதியில் விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     விழாவில் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட ஆலோசகர் முருகானந்தம், தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இவ்விழாவில் மங்கலம் பகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் சம்சுதீன், துணை தலைவர் விக்னேஷ், பொருளாளர் நவீன், இளைஞரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பூர் மேற்கு பகுதி தலைவர் விஜய், பல்லடம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிவ ஷர்மிளா அறக்கட்டளை ஒருங்கிணைந்த வளாகத்தில் முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆர். சுகுமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், சதீஸ், லோகு, சிவா, அஸ்வின், மணி, பசபுகழ் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் காளிமுத்து, போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் நடிகர் விஜய் ஒப்புதலுடன் நியமனம் செய்து வருகின்றனர்.
    • என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பூர் :

    தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் அணி வாரியாக தலைவர்கள், நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.

    அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் பரிந்துரையின் பேரில் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இளைஞர் அணி செயலாளராக கோல்டு பாண்டி, துணைத்தலைவராக தினேஷ், துணைச் செயலாளராக அப்பாஸ், பொருளாளராக சண்முகம், இணைச் செயலாளர்களாக வசந்த், எம்.எஸ்.கே., மாவட்ட நிர்வாகி மகேந்திரன், கவுரவ ஆலோசகர் லோகு, மாவட்ட பிரதிநிதி சிவா, ஆலோசகர்கள் மோகன், தீபக், ஹரி, அஸ்வின் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.சுகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது 23 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கும் பரிந்துரை செய்த தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பதவி வழங்கிய தலைமைக்கு என்றென்றும் கட்டுப்பட்டு இயக்கத்தை வலுப்படுத்த உண்மையாக உழைப்பேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.

    அதன்படி திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர். தெற்கு மாவட்ட தலைவராக ஜி.கே சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மாவட்ட செயலாளராக ராம்குமார், துணைத்தலைவராக மகாதேவன், பொருளாளராக கிருஷ்ணன், இணைச்செயலாளராக கார்த்திக், தெற்கு மாவட்ட அமைப்பாளராக கவுதம், துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்ட தலைவர் ஜிகே சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது 27 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×