என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vijay politics"
- தஞ்சை பெரிய கோவிலில் இன்று மதியம் நடிகை வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார்.
- நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்.
தஞ்சாவூா்:
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று மதியம் நடிகை வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முதல் முறையாக தஞ்சாவூா் பெரிய கோவிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் புதிய பரிமாணம் எடுத்துள்ளார். விஜய் பெரிய வெற்றி அடைய வேண்டும்.
விஜயும்-உதயநிதியும் அரசியலில் எதிரி என்பது சரிதான். விஜய்-உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள். நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
- விஜய், பொருளாதார கொள்கை குறித்து பேசவில்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. தமிழகத்தில் பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்க விஜய்க்கு உரிமை உள்ளது. திராவிடம் குறித்து பேசும் விஜய், பெரியார் உட்பட தலைவர்களின் கட்அவுட்களையும் பயன்படுத்தியுள்ளார்.
மக்கள் வாழ்வாதார பிரச்சனையான, பொருளாதாரம் குறித்து பேசுவது அவசியம். அதை தீர்மானிப்பது அரசியல் கட்சியின் பொருளாதார கொள்கை. ஆனால் விஜய், பொருளாதார கொள்கை குறித்து பேசவில்லை. அவரது பொதுக்குழு கூட்டத்திலும் ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை. இதுகுறித்து விஜய் விளக்க வேண்டும். அதன்பிறகே அவரின் இயக்கம் குறித்து கூற முடியும்.
மத்தியில் பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். அதனடிப் படையில்தான் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விளக்கம் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. அவர் கூறிய இந்த வரிகள், நன்னூலில் இடம் பெற்றுள்ளது.
- சமூக பிரச்சனைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது சமூகவலைதள பக்கத்தில் அவ்வப்போது, சமூக பிரச்சனைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் ராமதாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில், 'பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கான விளக்கம் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. அவர் கூறிய இந்த வரிகள், நன்னூலில் இடம் பெற்றுள்ளது. இதற்கான பொருள் விளக்கம் என்னவென்றால், 'பழையன கழிவதை தடுக்க முடியாது, புதியன வருவதையும் நிறுத்த முடியாது, இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்பதாகும்.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் விதமாக ராமதாஸ் இவ்வாறு வெளியிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.
- விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.
- மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில் பா.ஜ.க. புதிதாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயருடன் நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார்.
தேர்தல் களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இருந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு உதவிகளை செய்வது, தமிழகத்தின் நலன் சார்ந்த செயல்களுக்காக குரல் கொடுப்பது என விஜய்யின் அரசியல் பயணம் திட்டமிட்ட திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
தமிழக தேர்தல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் மரணம் அடைந்த பிறகு கூட்டணி அரசியல் தான் கை கொடுத்து வருகிறது. அந்த வகையில் விஜய்யும் கூட்டணி அரசியலுக்கு தயாராக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளோடு விஜய் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனித்து களம் காண விஜய் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.
விஜய்யின் அரசியல் பயணம் தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். மறைந்த தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரது கொள்கைகளை பின்பற்றி அரசியல் களத்தில் நடைபோட உள்ள விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருவள்ளுவரின் வார்த்தைகளையும் பயன்படுத்தியே அரசியல் மேற்கொண்டு வருகிறார்.
சமூக நீதிக் கொள்கைகள், இரு மொழிக் கொள்கை ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல முடிவு செய்துள்ள விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.
கல்வியை தமிழக பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பதும் தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கையாக உள்ளது. இப்படி தமிழ் தமிழர்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி சட்ட மன்றத் தேர்தலை அவர் சந்திக்க இருக்கிறார்.
ஆன்லைன் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 48 லட்சம் பேர் இதுவரை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமான வகையில் பொதுமக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்குள் 5 மண்டல மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ள விஜய் 10 மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளார். 100 தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலம் முழுவதும் தனது ரசிகர்கள் மற்றும் கட்சியில் சேரும் இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.
2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என 30 அணிகளை தமிழக வெற்றிக் கழகத்தி்ல் உருவாக்குவதற்கும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தி கோட்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் திருச்சி அல்லது மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் மாநாட்டில் ஏற்ற உள்ளார். இப்படி வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு விஜய் அதிரடியாக தயாராகி வருவதால் நிச்சயம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கணித்து இருக்கிறார்கள்.
தேர்தல் களத்தில் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுதியோடு இருக்கிறார்கள். இதனால் நிச்சயம் 2026 -ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக ஆவார் என்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
- விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபு உடனான படத்தை நிறைவு செய்துவிட்டு 2025 ஆம் ஆண்டு முழுவதும், மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த தகவலை சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சூசகமாக தெரிவித்தார். அவரது பேச்சுக்கு சிலர் ஆதரவு அளித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர். அதன்பின்னர் சமீபத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுவதாக கூறினார்.
‘சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவிற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் கிடையாது. விஜய் அரசியலில் குதித்து அடிபடாமல் தப்பினால் சரி’ என ஏற்கனவே உதயகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது. #MinisterUdhayakumar #VijayPolitics
இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை பாபநாசம் வந்தார்.
அங்கு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். தற்போது ஆன்மீக பயணமாக நான் வந்துள்ளேன்.
இந்த புகழ் எல்லாம் தமிழக மக்களால் வந்தது. நான் மட்டும் சந்தோஷமாக இருப்பதை விட தன் அருகில் இருப்பவர்களையும் மகிழ்வோடு வைத்து கொள்ள வேண்டும் என்பதால் தான் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளேன்.
25 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் சீடராக உள்ளேன். இதுவரை 69 படங்கள் இயக்கி உள்ளேன். மன மகிழ்வுக்கு ஜாதி, மத வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். 3 முறை காசிக்கு சென்றுள்ளேன். கைலாய யாத்திரையும் மேற்கொண்டுள்ளேன். தினமும் காலையில் யோகா செய்து வருகிறேன்.
பாபநாசம் மிக முக்கியமான தலம். பாவங்களை போக்கும் அற்புத தீர்த்த கட்டம் இங்குள்ளது. எல்லோரும் 100 சதவீதம் நல்லவர்களாக இருக்க முடியாது. ஏதாவது குறைகள் இருக்கும். அத்தகைய சூழலில் பாவங்கள் போக்கும் பாபநாசத்திற்கு வருவது நல்லது. உலகில் எந்த மூலையில் இருப்பவர்களும் ஒருமுறையாவது பாபநாசம் வரவேண்டும்.
காசியில் உள்ள கங்கையை போன்றே புனிதமிக்க நதி தாமிரபரணி. 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைத்தே வகுத்துள்ளனர்.
இவ்வாறு டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார்.
தொடர்ந்து அவர் நாளை கன்னியாகுமரி செல்கிறார். நாளை மறுநாள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்.#ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்