என் மலர்
நீங்கள் தேடியது "Vijay shankar"
- ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார்.
- கடைசியாக 2014ல் சென்னை அணிக்காக விஜய் சங்கர் விளையாடினார்.
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார். இதன்மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் சி.எஸ்.கே. அணிக்கு திரும்பிய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை (3,591 Days) விஜய் சங்கர் (3,974 Days) முறியடித்தார்
2014ல் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடிய நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விஜய் சங்கர் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது.
- ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக ஐபிஎல் போன்றே, டிஎன்பிஎல் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சர்வதேச வீரர்களும், உள்ளூர் வீரர்களும் இணைந்து ஆடும் இப்போட்டி, தமிழகத்தில் பிரபலமானது. வரும் ஆண்டிற்கான டிஎன்பிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு குறித்த ஏலம் பற்றி, டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் இன்று மற்றும் நாளை விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா சூப்பர் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை என 8 அணிகள் களத்தில் உள்ளன.
மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.
மேலும் ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவு வீரருக்கு ரூ. 10 லட்சம், பி பிரிவு வீரருக்கு ரூ. 6 லட்சம், சி பிரிவு வீரருக்கு ரூ. 3 லட்சம் மற்றும் டி பிரிவு வீரருக்கு ரூ. 1.50 லட்சம் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது. விஜய் சங்கரை திருப்பூர் தமிழன்ஸ் ரூ.10.25 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் - துஷார் ரஹீஜா (பிரிவு டி) தக்க வைக்கப்பட்ட வீரர் ஆவர்.
- கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது.
- வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
சென்னை:
டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.
இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதல் வீரராக அறிவிக்கப்பட்ட விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் ஏலம் எடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது.
கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. ஏ பிரிவில் கடைசி வீரரான சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.
இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடந்து கொண்டிருக்கிறது.
- முதலில் ஆடிய குஜராத் விஜய்சங்கர், சாய் சுதர்சன் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய கொல்கத்தா 207 ரன்கள் மட்டுமே திரில் வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார்.
கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஜெகதீசன் 6 ரன்னும், குர்பாஸ் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
3வது ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 45 ரன்னில் அவுட்டானார்.
வெங்கடேஷ் அய்யர் 40 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்து வெளியேறினார்.
17-வது ஓவரை வீசிய ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆண்ட்ரூ ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரை வெளியேற்றினார்.
ஆனால், கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அணியை திரில் வெற்றிபெறச் செய்தார் ரிங்கு சிங்.
இறுதியில், கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இந்தப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணிகளை தமிழ்நாடு சீனியர் தேர்வு குழு அறிவித்துள்ளது.
டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன் அணி வருமாறு:-
விஜய் சங்கர் (கேப்டன்), சாய்கிஷோர் (துணை கேப்டன்), அஜித்ராம், கணேஷ், சச்சின், விமல்குமார், லக்சய் ஜெயின், அஜிதேஷ், சந்தீப் வாரியர், டிரிலோக், எம்.முகமது, ராகுல், கிரண், ரித்திக் ஈஸ்வரன், அதிக்-உர்-ரகுமான், முகமது அலி.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி வருமாறு:-
ஷாருக்கான்(கேப்டன்), சந்தோஷ் குமார், ஜிதேந்திர குமார், நிதிஷ் ராஜகோபால், மாதவராவ் பிரசாத், சித்தார்த், ராமஅரவிந்த், அஜய் கிருஷ்ணன், சுபங் மிஸ்ரா, குருராக வேந்திரன், சச்சின் ரதி, சுப்பிரமணியம், சரவண குமார், கர்பன்த்சிங், விக்னேஷ், சாமுவேல் ராஜ்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், அயர்லாந்து போட்டியில் ஆடுவதில் தேர்வு பெற்றுள்ளார். சாய் சுதர்ஷன், பிரகோஷ், ரஞ்சன் பவுல், ஜெகதீசன் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சி முகாமுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
பாபா அபராஜித்துக்கு திருமணம் நடைபெறுவதால் 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பங்கேற்க மாட்டார். பாபா இந்திரஜித் 2-வது போட்டியில் இருந்து ஆடுவார்.
- முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 291 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தினார்.
சேலம்:
ரஞ்சி கோப்பை தொடரில் நடந்து முடிந்துள்ள 6 சுற்றுகளின் முடிவில் தமிழ்நாடு அணி 22 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், சி பிரிவில் உள்ள தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சேலத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் 10 ரன்னிலும், பிரதோஷ் பால் 20 ரன்னிலும், ஜெகதீசன் 22 ரன்னிலும், முகமது அலி 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா இந்திரஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 122 ரன்னும், விஜய் சங்கர் 85 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- சண்டிகர் 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேலம்:
90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இதில் டி பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சண்டிகர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து 106 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சண்டிகர் முதல் இன்னிங்சில் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷிவம் பாம்ப்ரி 108 ரன்கள் எடுத்தார்.
97 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழகம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 150 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 403 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சண்டிகர் அணி களமிறங்கியது. அந்த அணி 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மனன் வோரா சதம் வீணானது.
தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ‘‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் (3 dimensions) சிறந்து விளங்கக்கூடியவர் என்பதால் விஜய் சங்கரை தேர்வு செய்தோம்’’ என இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், ‘‘அம்பதி ராயுடுக்கு போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சரியாக விளையாடவில்லை’’ என்றார். இதை மேற்கோள்காட்டி த்ரீ டைமன்சன் வார்த்தையை சுட்டிக்காட்டும் வகையில் ``உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக ‘3டி கிளாஸ்’ ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அம்பதி ராயுடு.

அம்பதி ராயுடுவின் இந்தப் பதிவு குறித்து தற்போது விஜய் சங்கர் பேசியுள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒரு கிரிக்கெட்டர் உலகக்கோப்பை போன்ற ஒரு தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி உணருவார்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஒரு வீரரின் பார்வையில் அந்த வலி எனக்குப் புரியும். அதே நேரம் ராயுடு என்னைக் குறிவைத்து அப்படி டுவீட் செய்யவில்லை என்பதும் தெரியும். அந்த நேரத்தில் அவரின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த டுவீட்டை போட்டிருப்பார். அப்போது அவர் என்ன சூழ்நிலையில் இருந்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார்.
உலகக்கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகிய குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர்களும் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் தேவை என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பிர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என நினைக்கிறேன். பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு உதவியான இன்னொருவர் தேவை. நாம் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோரை கொண்டுள்ளோம் என்று நீங்கள் வாதம் செய்யலாம், ஆனால், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என்பதால் இது சிறந்த தொடராக இருக்கும். இது நமக்கும் உண்மையிலேயே சிறந்த உலகக்கோப்பை சாம்பியனை வெளிப்படுத்தும். வருங்காலத்திலும் ஐசிசி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அணிகளை தேர்வு செய்ய ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்துள்ள கடைசி தேதியான ஏப்ரல் 23-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தேர்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதுதான் இதுவரை முடிவு செய்யவில்லை. மற்ற அனைத்து இடத்திற்கான வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர்.

ரிஷப் பந்தின் ஆட்டம் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். 3 நிலை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். விஜய் சங்கர் பேட்டிங் ஆல்ரவுன்டர் வரிசையில் இருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ரகானே உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த 3 பேரும் உலககோப்பை அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் வென்றுள்ளன.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகம்மது சமி, யுஸ்வேந்திர சாஹல்
ஆஸ்திரேலியா: அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்) ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா,
கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். #AUSvIND #TeamIndia #VijayShankar

தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ள விஜய் சங்கரும், ஷுப்மான் கில்லும் ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #TeamIndia #VijayShankar