என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Vasant MP"

    • கடந்த 14ந் தேதி அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.
    • அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை வழங்கி விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் எஸ் காமராஜ் உடன் இருந்தார்

    • ரூ.14.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
    • 60000 லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ரூ.14 லட்சம் செலவில் திறந்து வைத்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில், தொகுதியின் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள மருங்கூர் பேரூராட்சி பொது மக்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அங்கன்வாடி கட்டிடம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டது. 

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.

    இதேபோல், மகளிருக்கு பொருளாதார சுதந்திரம் வழங்குவதில் மிக சிறப்பாக செயலாற்றி வரும் மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்குவிக்கும் வகையில், தேரூர் பேரூராட்சி சங்கரன்புதூரில் மகளிர் சுய உதவி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 

    கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கட்டிட பணிகள் நிறைவுபெற்ற நிலையில், விஜய் வசந்த் எம்.பி இன்று திறந்து வைத்தார்.

    மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பீமநகரி ஊராட்சி அண்ணாநகரில் ரூ.9,50,000 தொகை ஒதுக்கீடு செய்து அலங்கார தரை கற்கள் பதித்து அந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக விஜய் வசந்த் எம்.பி இன்று திறந்து வைத்தார். 

    அது போல் 60000 லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ரூ.14 லட்சம் செலவில் திறந்து வைத்தார். 

    மேலும், சென்னை - நாகர்கோவில் தினசரி வந்தே பாரத் ரெயில் சேவை நேற்று துவங்கி வைக்கப்பட்டது. ரெயில் நாகர்கோவில் வந்தடைந்தபோது உற்சாக வரவேற்பளித்ததாக விஜய் வசந்த் எம்பி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • காமராஜர் படிப்பகத்தில் சிலை நிறுவ கோரிக்கை வைத்த நிர்வாகிகள்.
    • தனது சொந்த செலவிலேயே காமராஜர் சிலையை நிறுவினார்.

    நாகர்கோவில் பள்ளிவிளையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் படிப்பகத்தில் பெருந்தலைவரின் சிலை நிறுவ வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியினர் மற்றும் படிப்பக நிர்வாகிகள் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி யிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை நிறைவேறும் விதமாக விஜய்வசந்த் எம்பி தனது சொந்த செலவிலேயே காமராஜர் வெண்கல சிலையை நிறுவி அதனை அவரது தலைமையிலேயே திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவர் செல்வன், மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட் மற்றும் காங்கிரஸ் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற இயலும்.

    எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.


    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்துள்ளது.
    • சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.

    நாகர்கோவில்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது சாதனைகளை பாராட்டும் வண்ணம் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2010 ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக விளங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட், ஒரு நாள், 20-20 என அனைத்து போட்டிகளிலும் இந்தியாவிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையான பேட்டிங் வாயிலாகவும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

    அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளது. பல சாதனைகளை படைத்த நம்ம சென்னையை சேர்ந்த அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.

    இவ்வளவு திறமை வாய்ந்த வீரர் தனது புகழின் உச்சியில் ஓய்வை அறிவித்தது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார்.

    இத்தகைய சிறந்த வீரருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதினை மத்திய அரசு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×